அம்பாறை மாவட்டத்தில் கடமையில் உள்ள போக்குவரத்து பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சம்மாந்துறைப் பொலிஸார்களினால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரையான காலப்பகுதியில் திடீர் போக்குவரத்து விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக பத்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீது தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்தியது, சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் என்பன போன்ற குற்றங்கள் பற்றி சம்மாந்துறைப் பொலிஸார்கள் பல்வேறு குற்றங்களுக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இது தவிர, டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலித்தார்களை கேலி செய்து காணொளி பதிவிட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு இருவர் கைதாகினர்.











































