பிந்திய செய்திகள்

தமிழர்களின் இனப்பண்பாட்டை அழிக்கும் நோக்கில் பௌத்த சிங்களத் தேசியவாதத்தின் முன்னேற்றம்

இலங்கையின் அரசியல் களம் இன்றும் மகாவம்ச மனநிலையில் இருந்து மாறாமல் இருப்பதை கடந்த ஒன்றரை வருடங்களாக ஆட்சியில் இருக்கும் இடதுசாரி அரசியல் அதிகார வர்க்கம் நிரூபித்துள்ளது. கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தமிழர் தாயகத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆயுதப் போராட்டத்தை ஏற்படுத்தியது.

இந்த அநீதி இனிமேல் இழைக்கப்பட மாட்டாது என்று சொல்லப்பட்டாலும், இன்றைய அரசாங்கமும் தமிழின அழிப்பு செயல் திட்டத்தை மேலும் முன்னோக்கி நகர்த்தி செல்கிறது. இதனை நிரூபித்துள்ளது தமிழ் பாடகர் ஒருவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து அடைத்ததன் மூலம்.

மகாவம்ச மனநிலை தமிழின, இந்திய எதிர்ப்பு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பதற்கு இலங்கை தீவில் தமிழினத்தை அழிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இதனை கடந்த 78 ஆண்டுகளாக ரத்தம் தோய்ந்த இனப்படுகொலை செய்ததனை சிங்கள பௌத்த அரசின் இறையாண்மை என்பதன் ஊடாக நியாயப்படுத்துகிறது.

இன அழிப்பு என்பது இரத்தம் தோய்ந்த இனப்படுகொலைகளால் மட்டும் நிகழ்த்தப்படுவது அல்ல. அது ஒரு இனத்தை ஆதிக்க இனத்துக்குள் கரைத்து விடுகின்ற இனமயமாக்கல் மூலமும் இல்லாத ஒழித்து விட முடியும். இதுவே இப்போது இலங்கையில் தொடர்கிறது. தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை ரத்தம் தோய்ந்த படுகொலைகளையை இலங்கை சிங்கள பௌத்த அரசு நிறைவேற்றி வந்தது.

இப்போது அது இன்னொரு கட்ட வளர்ச்சி அடைந்து இன மயமாக்கல் என்ற வகையில் இனப்படுகொலையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது. அதுவே இன்றைய இலங்கை அரசியலின் நடைமுறையாக மாற்றமடைந்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts