நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கை இன்று காலை 4:00 மணி முதல் நாளை காலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும்.
களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரிய ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வாழும் மக்கள் மண்சரிவு, மரங்கள் சரிந்து வீழுதல் மற்றும் பாறைகள் உருண்டு விழுதல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த எச்சரிக்கை காலத்தில் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், மலைப்பகுதிகளில் பயணம் செய்யும்போது அதிக அவதானத்துடன் இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மண்சரிவு அபாயத்தை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.











































