லண்டனில் பெரும் தீ விபத்து: 100 பேர் வெளியேற்றப்பட்டனர்
லண்டனில் அமைந்துள்ள தொழிற்பேட்டை ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரென்ட் பகுதியில் ஏற்பட்ட தீயானது அணைக்கப்பட்டுள்ளதாக லண்டன் தீயணைப்புப் படை கூறியுள்ளது. இந்த தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பகுதி தொடர்பாக குடியிருப்பாளர்களை தங்கள் வீடுகளின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிக்கொள்ளுமாறு லண்டன் தீயணைப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.
பிரென்ட்டில் உள்ள ஆக்ஸ்கேட் தெருவில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்திருந்த இரண்டு மாடிகளைக் கொண்ட பல்நோக்குக் தொழிற்பேட்டை இவ்வாறு தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.









































