Home உலகம் கனடா கனடா பிரமதரின் முடிவு – பூரண ஆதரவு அளித்த நாடாளுமன்றம்!

கனடா பிரமதரின் முடிவு – பூரண ஆதரவு அளித்த நாடாளுமன்றம்!

0
கனடா பிரமதரின் முடிவு – பூரண ஆதரவு அளித்த நாடாளுமன்றம்!

கனடா நாடாளுமன்றம் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளைச் சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆதரித்துள்ளது.

திங்களன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 151க்கு எதிராகவும் 185 வாக்குகள் ஆதரவாகவும் பெற்று லிபரல் மற்றும் இடதுசாரி NDP ஆதரவுடன் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

வார இறுதியில், நாடாளுமன்றைச் சுற்றியுள்ள வீதிகளின் ஒட்டாவாவில் உள்ள இறுதிப் போராட்ட தளத்தை காவல்துறையினர் அகற்றினர்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வார தொடக்கத்தில் அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்தினார். முன்னதாக திங்களன்று, பிரதமர்,தற்காலிக அவசரகால நடவடிக்கைகளை தொடர்ந்து பயன்படுத்துவதை ஆதரித்தார்,.

நாடு முழுவதும் நிலைமை “இன்னும் பலவீனமாக உள்ளது” மற்றும் புதிய முற்றுகைகளைத் தடுக்க அவை தேவை என்று கூறினார். “னினும் தேவையானதை விட ஒரு நாள் கூட” அதிகாரங்கள் வைக்கப்படாது என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here