நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
அறிவித்துள்ளார்.பாரவூர்தி சாரதிகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கனடா அரசாங்கம் உத்தரவிட்டமைக்கு பாரவூர்தி சாரதிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்கும் விதமாக
1970 ஆம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
போராட்டக்காரர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களது பாரவூர்திகள் பறிமுதல் செய்யவும் போராட்டக்காரர்களால் போக்குவரத்து முடக்கிவைக்கப்பட்டுள்ள பாலங்களை உடனடியாக திறக்கவும் பிரதமர் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாரவூர்தி சாரதிகளுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரவூர்தி சாரதிகள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் பாரவூர்திகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டாவா பாலத்தைப் போராட்டக்காரர்கள் முடக்கியதால் அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதையடுத்து போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு கனடா- அமெரிக்கா இடையிலான ஒட்டாவா பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.













































