கனடாவில் பலரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இலங்கை தமிழ் இளைஞர் உள்ளிட்ட பலர் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள வயதானவர்களை குறிவைத்து, பண மோசடி செய்தவர்கள் $1.1 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டொராண்டோ பொலிஸார் கூறியுள்ளனர். அதன்படி மார்ச் 2021 முதல், மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுமார் 100 புகார்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த மோசடியில் இருந்து பெறப்பட்ட மொத்த பணம் $1.1 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் டொரோண்டோவை சேர்ந்த 22 வயதான அயிந்தன் ஸ்ரீ ரஞ்சன் என்ற தமிழ் இளைஞரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாவும், இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் முன்வந்து தகவல் வழங்குமாறும் டொராண்டோ பொலிஸார் கோரியுள்ளனர்.