Home உலகம் கனடா கனடா வில் இருந்து சென்னை வந்த இளைஞர் மர்மமான முறையில் மரணம்

கனடா வில் இருந்து சென்னை வந்த இளைஞர் மர்மமான முறையில் மரணம்

0
கனடா வில் இருந்து சென்னை வந்த இளைஞர் மர்மமான முறையில் மரணம்
Gallery

கடந்த 13 ஆம் திகதி கனடா வாழ் இளைஞர் ஒருவர் தாயுடன் சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக சென்ற நிலையில் மர்மமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் 35 வயதான மகிந்தன் தயாபரராஜா எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் தேனீர் வாங்குவதற்காக விடுதியை விட்டு வெளியே சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து காணாமல்போன 3 நாட்களின் பின்னர் மேல் மருவத்தூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் வீதியோரம் மகிந்தன் தயாபரராஜா வீழ்ந்து கிடந்துள்ளார்.

பகல் 12 மணியளவில் வீதியோரத்தில் மகிந்தன் தயாபரராஜா மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து, வீதியால் சென்ற மருத்துவர் ஒருவரும், அங்கு இருந்தவர்களும் அந்த இளைஞனை தமிழக அரசின் இலவச நோயாளர் காவு வண்டி எண் 108 இற்கு தகவல் தெரிவித்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் 17 ஆ ம் திகதி அதிகாலை 5 மணி அளவில் இவர் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை மகிந்தன் தயாபரராஜாவை மேல்மருவத்தூரில் இருந்து செங்கல்பட்டுவரை அழைத்துச் சென்றது யார் என்பது இதுவரை தெரியவரவில்லை. அதோடு அவரிடமிருந்து பணம் ஏதாவது பறிபோனதா, அல்லது பணத்திற்காக அந்த இளைஞன் கடத்தபட்டிருந்தாரா என்பதும் தெரியவரவில்லை.

இந்நிலையில் தற்போது அவரின் உடலை கனடாவுக்கு கொண்டு செல்வதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துகிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here