பிந்திய செய்திகள்

ஆர்ஜே பாலாஜி தமிழக முதல்வரை நேரில் சந்திப்பு

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்னர், திரைப்பட உலகின் பிரபலங்கள் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், ஸ்ரீமன், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் அவரை சந்தித்திருக்கும் நிலையில், நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் அவரை சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

ஆர்ஜே பாலாஜி வெளியிட்ட பதிவில், “கருப்பு படத்துக்கான அனைத்தையும் தொடங்கி வைத்த அந்த மனிதருடன் இப்போது நிற்கிறேன். அவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக சந்திப்பது ஏதோ கனவு போல உணர்கிறேன். அதே அன்பு, அதே அரவணைப்பு, அதே கனிவு, அதே நிதானம்” என்று குறிப்பிட்டுள்ளார். இது ஆர்ஜே பாலாஜிக்கும் விஜய்க்கும் இடையே உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “கருப்பு” படம் கடந்த மாதம் 14ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை உலகளவில் ரூ.300 கோடியை கடந்து வசூலித்து வருகிறது. இப்படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் ஆர்ஜே பாலாஜி கூறியிருந்தார். சில காரணங்களால் அது நடக்கவில்லை. ஆனால் இப்போது அவர் முதலமைச்சராக இருக்கும் இந்த சூழலில், ஆர்ஜே பாலாஜி அவரை சந்தித்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts