பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (30-04-2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்ப பாரம் குறையும். நாள்பட்ட விருப்பங்கள் பூர்த்தியாகும். சிக்கலான சவால்களை கூட எளிதில் தீர்க்க முடியும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். கோர்ட் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தொழில். வியாபாரம் செழிப்படையும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் வீண் வாக்குவாதம் பிரச்சனையை ஏற்படுத்தும். உடல் நலம் மேம்படும். தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். புது தொழில் யோகம் அமையும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் புகழ் ஓங்கும். புது நபர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். பொருளாதார நிலை சீராக இருக்கும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். தொல்லைகள் தந்தவர்கள் விலகி நிற்பர். பண வரவில் ஏற்றம், இறக்கம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

துலாம் ராசி

நேயர்களே, நேற்றைய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். புண்ணிய காரியங்களில் நாட்டம் ஏற்படும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக முடியும். உறவினர்களின் உதவி மனதிற்கு உற்சாகம் தரும். திருமண காரியம் கைகூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்

தனுசு ராசி

நேயர்களே, பிரிந்து சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். கணவன் மனைவி உறவில் குதூகலம் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மகர ராசி

நேயர்களே, ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். நண்பர்கள் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, மனதில் துணிச்சல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையான பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். மன வலிமை கூடும். சுற்றியுள்ளவர்கள் ஆதரவு மன மகிழ்ச்சியை தரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts