பிந்திய செய்திகள்

இந்த வார ராசி பலன் (23-05-2022) முதல் (29-05-2022) வரை

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். எனக்கு எதுவுமே நல்லது நடக்கவில்லை என்று சொல்லி, வருத்தப்பட்டு, கோபப்பட்டு, எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்கக்கூடாது. குறிப்பாக இத்தனை நாள் செய்துவந்த தொழிலில் லாபம் இல்லை என்று அந்தத் தொழிலை கை மாற்றி விடாதீர்கள். இனி வரப்போற காலங்களில் நல்ல வருமானம் கிடைக்கும். இதே போல வேலை செய்யும் இடத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து விட்டது. சம்பளமும் சரியில்லை, என்று அந்த வேலையை விட்டு விடாதீர்கள். இனி உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கின்றது. இவ்வளவு நாள் கஷ்டப்பட்டுதற்கு இனிமேல் பலன் உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தினம்தோறும் துர்க்கையம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. கஷ்டங்கள் அவ்வபோது வந்து போகத்தான் செய்யும். இருப்பினும் அதனை சமாளிக்கக்கூடிய தெம்பு உங்கள் மனதில் உள்ளது. தைரியமாக பிரச்சனைகளை திரும்பிப் பார்த்தால், பிரச்சனை நம்மை கண்டு ஓடி விடும். பிரச்சினைகளைக் கண்டு நீங்கள் பயந்தால், உங்கள் பின்னால் அந்த பிரச்சனை துரத்த தான் செய்யும். இதற்காக பிரச்சனைகளை சமாளிக்க குறுக்கு வழிக்கு போகாதீங்க. நேர்வழியில் இருந்து தன்னம்பிக்கையோடு போராடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நாவடக்கம் தேவை. அதாவது எப்போது பார்த்தாலும் பேசிக்கொண்டே இருந்தால் ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று பேச்சு உங்களை பிரச்சனையில் கொண்டு போய் விட்டு விடும். மற்றபடி சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் இருக்கிறது. சொந்த தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். உங்களுடைய வாயை மட்டும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டால் எல்லாமே நன்மைதான். தினம்தோறும், ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத சில நன்மைகள் உங்களை தேடி வரப்போகின்றது. சொந்தமாக வீடு வாங்கும் கனவு நிறைவேறும். வீட்டிற்கு தேவையான ஆடை ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளிடம் கோபப்பட வேண்டாம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும். உங்களுக்கு இந்த வாரம் 23, 24 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றி தரும். கடன் சுமை படிப்படியாக குறையத் தொடங்கும். வேலை செய்யுமிடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். சொந்த தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் அதுவும் சரியாகிவிடும். உங்களுடைய குடும்ப விஷயத்தில் அனாவசியமாக மூன்றாவது மனிதரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எதிர்பாலின நட்போடு கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தினம்தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும். மே 25, 26 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் இந்த வாரம் முழுவதும் 24 மணி நேரமும் கொஞ்சம் உஷாராகவே இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ரொம்பவும் பிடித்தவர் உங்களுடைய நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் கூட உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளது. யாரை நம்பியும் எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் முன்கூட்டியே உங்களுடைய வேலையை முடித்து விடுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். மற்றபடி பெரியதாக கவலைப் படுவதற்கு பிரச்சனைகள் இல்லை. தினம்தோறும் நவகிரக சன்னிதான உள்ள கோவிலுக்கு சென்று நவகிரகங்களை வழிபாடு செய்வது நன்மை தரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிப்பட போகின்றது. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அப்படியே தூசு போல தட்டி விட்டு செல்வீர்கள். உடம்பில் உற்சாகம் மனதில் தைரியத்தோடு நிறைய விஷயத்தை சாதிக்கப் போகிறீர்கள். அதி அற்புதம் வாய்ந்த வாரம் தான் இந்த வாரம். முடிந்தால் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று நன்றி தெரிவித்து விட்டு வாருங்கள். இந்த வாரம் உங்களை பிடிக்காதவர்கள் கூட அவர்களாகவே வந்து உங்களிடம் பேசுவார்கள் என்றால் பாருங்களேன். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. தினம்தோறும் சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் வாழ்வில் நன்மையை தரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை தைரியத்தோடு எதிர்கொள்வீர்கள். நிச்சயமாக வெற்றி உங்கள் பக்கம் நிற்கும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை உங்களை தேடி வருவாங்க. சிலசமயங்களில் குடும்பத்தில் வரக்கூடிய சண்டை சச்சரவு மனநிம்மதியை குறைக்கும். வண்டி வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான நல்ல வரவு வரப்போகின்றது. வீட்டில் ராஜ உபசாரம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் ராஜபோக மரியாதை கிடைக்கப் போகின்றது. உங்களின் அறிவாற்றலை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட போகிறார்கள். கொஞ்சம் புத்திசாலிதம் இந்த வாரம் உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். அவ்வளவு தான். பாராட்டுகளை கேட்டு மனதில் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கிவிடும். ஆனால் பண விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். அடுத்தவர்களுடைய பேச்சில் மயங்கி ஏமாந்து விடாதீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்க போகின்றது. எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டிவிட்டு அப்பாடா என்று நன்றாக தூங்கி எழ போகிறீர்கள். புதிதாக பிறந்தது போல ஒரு ஆறுதல் கிடைக்கும். கஷ்டங்கள் எல்லாம் மறைந்து போகும். துயரங்கள் எல்லாம் தூர சென்றுவிடும். புதியதாக வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது. சொந்தத் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வங்கி கடன் சுலபமாக கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். வில்லங்கத்தில் இருந்த சொத்து பிரச்சனை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடும். நஷ்டத்தில் இருந்த தொழில் கூட அடுத்த சில நாட்களில் நல்ல லாபத்தைக் கொடுக்கும். வெளிநாட்டு பயணங்கள் லாபத்தை தரும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் பேச்சுக்கு என்று ஒரு மரியாதை கிடைக்கும். அறிவாற்றல் திறமை வெளிப்படும். திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குவா குவா சத்தம் கேட்கும். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான பாரமாக இருக்க போகின்றது. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விஷயத்தை எல்லாம் கற்றுக்கொண்டு, உங்களுடைய திறமையை உயர்த்திக்கொள்ள போகிறீர்கள். சொந்த வீடு வாங்க கூடிய ஆசை நிச்சயம் கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும். ராஜ யோகம் உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கின்றது. உங்களுடைய பேச்சுத் திறமையால் நிறைய நல்ல விஷயங்களை சாதிக்கலாம். தலைகனம் கர்வத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். பணிவோடு நடந்து கொண்டால் வெற்றி உங்கள் பக்கம் நிரந்தரமாக நிற்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டால் நீங்கள் தான் ராஜா. தினம்தோறும் மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக் கொண்டே வாருங்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts