பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (30-05-2022)

மேஷம் :

அசுவினி: முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். செலவு அதிகரிக்கும் என்பதால் நிதானம் அவசியம்.
பரணி: அந்நியர் மூலம் ஆதாயம் காண்பீர்கள். உங்களுடைய வார்த்தைகளில் கவனம் வேண்டும்.
கார்த்திகை 1: நினைத்த ஒன்றில் வெற்றி காண்பீர்கள். ஆதாயம் காண்பீர்கள். நன்மையான நாள்.

ரிஷபம்:

கார்த்திகை 2, 3, 4: மனதில் குழப்பம் வந்து செல்லும். செயல்களில் தடுமாறுவீர்கள். கவனம் தேவை.
ரோகிணி: விரும்பியபடி செயல்படுவீர்கள். விஐபிகளின் ஆதரவால் நன்மை அடைவீர்கள். யோகமான நாள்.
மிருகசீரிடம் 1, 2: தனித்தன்மை வெளிப்படும். அரசு வகையில் முயற்சிகள் நன்மையாகும். பணவரவு உண்டு.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: திடீர் செலவுகளால் தடுமாறுவீர்கள். அரசு முயற்சி இழுபறியாகும். நிதானம் அவசியம்.
திருவாதிரை: பயணத்தில் கவனம் தேவை. புதிய முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: நண்பர் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.

கடகம்:

புனர்பூசம் 1, 2, 3: பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். எதிர்பாராத வரவு உண்டு. அதிர்ஷ்டமான நாள்.
பூசம்: நேற்றுவரை இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டு.
ஆயில்யம்: தொழிலில் இருந்த தடை விலகும். ஆதாயம் அதிகரிக்கும். நன்மையான நாள்.

சிம்மம் :

மகம்: எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.
பூரம்: வேலையில் இருந்த இழுபறி விலகும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
உத்திரம் 1: தொழிலை விரிவு செய்வீர்கள். உங்களின் முயற்சிக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கன்னி :

உத்திரம் 2, 3, 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். மனம் தெளிவாகும். வெற்றி உண்டு.
அஸ்தம்: விஐபிகளின் ஆதரவால் நினைத்ததை சாதிப்பீர்கள். பண வரவு உங்களின் சிரமத்தை நீக்கும்.
சித்திரை 1, 2: ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். விலகிச் சென்ற உறவினர் திரும்ப வருவர்.

துலாம் :

சித்திரை 3, 4: பயணங்களில் கவனம் தேவை. முயற்சி இழுபறியாகும் என்பதால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
சுவாதி: நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னைகள் உங்களைத் தேடி வரும். நிதானம் அவசியம்
விசாகம் 1, 2, 3: வீண்சங்கடங்களை அனுபவிக்க நேரும். வம்பு வழக்குகள் தேடிவரும். எச்சரிக்கை அவசியம்.

விருச்சிகம் :

விசாகம் 4: நண்பர்களின் உதவியுடன் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும்.
அனுஷம்: விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவர். திட்டமிட்டிருந்த செயலில் வெற்றி கிடைக்கும்.
கேட்டை: சுறுசுறுப்பாக செயல்பட்டு செயலில் வெற்றி காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

தனுசு :

மூலம்: எதிரிகளை முறியடிப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று நிறைவேறும். ஆதாயமான நாள்.
பூராடம்: உங்கள் செயல்பாடுகளைக் கண்டு மேலதிகாரிகள் பாராட்டுவர். மறைமுக எதிரிகள் விலகுவர்.
உத்திராடம் 1: விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மற்றவர்கள் பாராட்டுவர்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: எதிர்பார்த்த ஒன்று கடைசி நேரத்தில் கை நழுவிச் செல்லும். மனம் சங்கடம் அடையும்.
திருவோணம்: முயற்சியில் தடைகளும் தாமதமும் உண்டாகும். பொறுமையும் நிதானமும் அவசியம்.
அவிட்டம் 1, 2: எச்சரிக்கையுடன் செயல்பட்டால் முயற்சியில் நன்மை அடையலாம். பேச்சில் கவனம் தேவை.

கும்பம் :

அவிட்டம் 3, 4: அரசு வகையில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். கணக்கு வழக்குகளில் கவனம் தேவை.
சதயம்: எதிர்பார்த்த ஒன்றில் ஏமாற்றம் காண்பீர்கள். வேலைப்பளு அதிகரிப்பதால் சோர்வு அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: அரசு வகையில் நன்மையைக் காண முடியாமல் போகும். பிள்ளைகளால் உதவி உண்டு.

மீனம் :

பூரட்டாதி 4: உங்களுடைய முயற்சி வெற்றி பெறும். பயணத்தால் நன்மையும் ஆதாயமும் அடைவீர்கள்.
உத்திரட்டாதி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் இன்று வந்து சேரும். நன்மையான நாள். ஆதாயம் அதிகரிக்கும்.
ரேவதி: தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள். உங்களுடைய எண்ணத்தில் ஒன்று நிறைவேறும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts