பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (19-05-2022)

மேஷம்:

அசுவினி : நீங்கள் வியாபாரத்தில் நினைத்ததை செயல்படுத்துவீர்கள். நட்பு வட்டம் விரியும்.
பரணி : நீண்டநாள் பிரச்னை ஒன்றுக்கு இன்று தீர்வு காண்பீர்கள். அனுகூலமான நாள்.
கார்த்திகை 1 : தெய்வ அனுகூலத்தால் நீங்கள் ஈடுபடும் செயலில் வெற்றி அடைவீர்கள்.

ரிஷபம்:

கார்த்திகை 2, 3, 4 : யாரையும் நம்பி உங்கள் வேலைகளை இன்று ஒப்படைக்க வேண்டாம்.
ரோகிணி : நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.நிதி நிலை சீராகும்
மிருகசீரிடம் 1, 2 : குடும்பத்தில் ஒருவருக்கு இனம் புரியாத பயம் வந்து போகும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4 : நண்பரால் நன்மை அடைவீர்கள். விலகிச்சென்ற உறவு தேடி வரும்.
திருவாதிரை : கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்னை விலகும். மகிழ்ச்சி காணப்படும் நாள்.
புனர்பூசம் 1, 2, 3 : வியாபாரத்தில் இருந்து வந்த தடையை நீக்குவீர்கள். லாபம் காண்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4 : நீங்கள் இன்று ஈடுபடும் செயலில் வெற்றி காண்பீர்கள்.மகிழ்ச்சி காணும் நாள்.
பூசம் : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும். ஆதாயம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : நேற்றுவரை இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை இன்று முடிவுக்கு வரும்

சிம்மம்:

மகம் : உங்கள் செயலில் கவனம், நிதானமும் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
பூரம் : சொத்துகள் குறித்த பிரச்னையில் சாதகமான நிலை உண்டாகும்.
உத்திரம் 1: பொறுமையாக செயல்பட்டு தொழிலில் லாபம் காண வேண்டிய நாள்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4 : வரவேண்டிய தொகை இன்று உங்கள் கைக்கு வந்து சேரும்.
அஸ்தம் : உங்கள் ஆற்றல் வெளிப்படும். எதிர்பார்த்த ஒரு செயலில் வெற்றி உண்டாகும்.
சித்திரை 1, 2: நேற்றைய பிரச்னை ஒன்று இன்று முடிவிற்கு வரும். எதிர்பார்த்த மகிழ்ச்சியை அடைவீர்கள்.

துலாம்:

சித்திரை 3, 4 : உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும்.
சுவாதி : சகோதரர்கள் உதவியால் உங்கள் எண்ணம் நிறைவேறும். மகிழ்ச்சியான நாள்.
விசாகம் 1, 2, 3 : உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்:

விசாகம் 4 : வீடு,மனை வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
அனுஷம் : உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள்.
கேட்டை : பெரியவர்கள் உங்களுடைய செயலுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு :

மூலம் : உங்கள் செயல்களில் குழப்பமும் தடுமாற்றமும் ஏற்படும். நிதானம் தேவையான நாள்.
பூராடம் : யோசித்து செயல்படுவதால் வியாபாரத்தில் நன்மை அடைவீர்கள்.
உத்திராடம் 1: அதிரடியாக வியாபாரத்தில் செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.

மகரம்:

உத்திராடம் 2, 3, 4 : வங்கிக்கு கவனமாக செல்லவும். வாகனத்திற்கு செலவு செய்வீர்கள்.
திருவோணம் : தொழிலில் புதிய முதலீடு செய்வீர்கள். வீடு மனை வாங்கும் முயற்சி ஈடேறும்.
அவிட்டம் 1, 2: தனித்து நின்று செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்வீர்கள்.

கும்பம் :

அவிட்டம் 3, 4 : தொழிலில் இருந்து வந்த இழுபறி முடிவிற்கு வரும். லாபம் காண்பீர்கள்.
சதயம் : உங்கள் திறமை வெளிப்படும். வருமானத்திற்குரிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: விலகிச் சென்ற உறவினர் தேடி வருவார்கள். வாழ்க்கைத்துணை வழியே மகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம் :

பூரட்டாதி 4 : புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றிபெறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
உத்திரட்டாதி : சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும்.
ரேவதி : வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts