பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (29-05-2022)

மேஷம் :

அசுவினி: இன்று மதியம் வரை மகிழ்ச்சி நீடிக்கும். அதன் பிறகு குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள்.
பரணி: விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பரச் செலவு அதிகம் செய்ய நேரிடும்.
கார்த்திகை 1: பிரச்னைகளில் ஒன்று முடிவிற்கு வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4: செலவு கட்டுப்படும். குடும்பத்தினருடன் மகிழ்வீர்கள். மாலையில் இனிய அனுபவம் உண்டு.
ரோகிணி: மகிழும் வகையில் இன்றைய பொழுது அமையும். குடும்பத்தினருடன் வெளியில் செல்வீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பணவரவும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆனால் திடீர் செலவுகளைச் சந்திப்பீர்கள்.
திருவாதிரை: புதிய சிந்தனை மேலோங்கும். இன்று மதியம் வரை சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: உடல் நிலையில் இருந்த பிரச்னைகள் விலகும். சங்கடங்களில் இருந்து விடுபட்டு மகிழ்வீர்கள்.

கடகம் :

புனர்பூசம் 1, 2, 3: மதியதிற்கு மேல் வருமானம் கூடும். சந்தோஷமான மனநிலை உருவாகும். நல்ல நாள்.
பூசம்: தொழிலில் புதிய உத்தியைக் கையாள்வீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். நண்பர்களால் மகிழ்வீர்கள்.
ஆயில்யம்: தடைபட்ட வருமானம் இன்று வந்து சேரும். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.

சிம்மம் :

மகம்: இன்று மதியம் வரை செயலில் இழுபறி இருக்கும். அதன் பிறகு உங்களின் விருப்பம் நிறைவேறும்.
பூரம்: விருப்பம் இன்று நிறைவேறும். மதியத்திற்கு மேல் உங்களுடைய செயல்களில் நன்மை காண்பீர்கள்.
உத்திரம் 1: குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தின் மீது ஈடுபாடு கூடும். தொழிலை விரிவு செய்வீர்கள்.

கன்னி :

உத்திரம் 2, 3, 4: மதியம் வரை மனம் படபடப்பாக இருக்கும். பின்னர் குடும்பத்தினருடன் பொழுது போக்குவீர்கள்.
அஸ்தம்: நெருக்கடி விலகும். பயணத்தை தவிர்ப்பது நல்லது. மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
சித்திரை 1, 2: இரண்டு நாளாக இருந்த சங்கடம் விலகும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்

துலாம் :

சித்திரை 3, 4: மதியம் வரை முயற்சி வெற்றியாகும். அதன்பின் மனதிற்கு சங்கடம் உண்டாகலாம்.
சுவாதி: வீண் பிரச்னையை சந்திப்பீர்கள். அந்நியர் தொந்தரவுகளால் உங்கள் மனம் அவதிப்படும்.
விசாகம் 1, 2, 3: குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். உங்கள் மனதில் தேவையற்ற குழப்பம் மேலோங்கும்.

விருச்சிகம் :

விசாகம் 4: சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்னை விலகும். மகிழ்ச்சியான நாள்.
அனுஷம்: குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும்.
கேட்டை: நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். குடும்பத்தினரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவீர்கள்.

தனுசு :

மூலம்: இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள். தொல்லை விலகும். உற்சாகமுடன் செயல்பட்டு வருவீர்கள்.
பூராடம்: பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். ஆதாயம் காண்பீர்கள். எதிரிகளின் தொல்லை நீங்கும்.
உத்திராடம் 1: திறமை இன்று வெளிப்படும். குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். செலவுகள் கூடும்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: குடும்பத்தினருடன் பொழுதைக் கழிப்பீர்கள். இனிய சம்பவங்கள் இன்று நடைபெறும்.
திருவோணம்: உறவுகளால் உண்டான சங்கடம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு தேவையை அடைவீர்கள்.
அவிட்டம் 1, 2: குடும்பத்தினர் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவீர்கள். மனதில் சந்தோஷம் கூடும்.

கும்பம் :

அவிட்டம் 3, 4: செயல்களில் வேகம் அதிகரிக்கும். வருமானத்தால் மகிழ்ச்சியான மனநிலையுடன் இருப்பீர்கள்.
சதயம்: உங்களுடைய முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம் :

பூரட்டாதி 4: எண்ணம் நிறைவேறும். மதியம் வரையில் குடும்பத்தினரின் மகிழ்ச்சியில் அக்கறை காட்டுவீர்கள். உத்திரட்டாதி: குடும்பத்தினரின் தேவையறிந்து செயல்படுவீர்கள். செல்வாக்கு உயரும். மகிழ்ச்சியான நாள்.
ரேவதி: விருந்து விசேஷம் என செல்வீர்கள். சகோதரர்கள் வழியில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts