பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (23-05-2022)

மேஷம் :

அசுவினி: தொழிலில் லாபம் காண்பீர்கள். அரசு வழியிலான முயற்சிகள் வெற்றியாகும்.
பரணி: தொழிலில் இருந்த தடைகள் விலகும். திடீர் பணவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கார்த்திகை 1: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். இதுவரை இழுபறியாய் இருந்த பணி முடிவிற்கு வரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4: துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய பொறுப்பு உங்களைத்தேடி வரும்.
ரோகிணி: உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தடைபட்டிருந்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் இன்று வந்து சேரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: அமைதியாக செயல்பட்டு சாதிக்க வேண்டிய நாள். முயற்சியில் தடைகளைச் சந்திக்கலாம்.
திருவாதிரை: எதிர்பார்த்த தகவல் வராமல் சோர்வடைவீர்கள். உங்கள் செயல்களில் இன்று அவசரம் வேண்டாம்.
புனர்பூசம் 1, 2, 3: பணியிடத்தில் நிதானம் தேவை. பணப் பரிவர்த்தனையில் சில சங்கடங்களை சந்திக்கலாம்.

கடகம்:

புனர்பூசம் 4: உங்களை சோர்வடையச் செய்யும் வகையில் சிலரின் நடவடிக்கை இருக்கும். அமைதி காப்பது நல்லது.
பூசம்: வம்பும் பிரச்னைகளும் இன்று உங்களைத் தேடிவரும். மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
ஆயில்யம்: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். உங்களைச் சுற்றி இருப்பவர்களால் அமைதி கெடும்.

சிம்மம் :

மகம்: சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் இன்று ஆதாயம் உண்டாகும்.
பூரம்: பிரச்னைகளை சமாளித்து வெளியில் வருவீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் 1: நண்பர்களின் உதவியால் முயற்சி வெற்றி பெறும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி காண்பீர்கள்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4: நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள். உங்களுடைய செயல்களில் வேகம், விவேகம் இருக்கும்.
அஸ்தம்: சோர்வு விலகி உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிரியால் ஏற்பட்ட சங்கடம் இன்று காணாமல் போகும்.
சித்திரை 1, 2: உங்களின் முயற்சிகளுக்கு பெரியோர் ஆதரவு கிடைக்கும். அதிரடியாக செயல்பட்டு அதிர்ஷ்டம் காண்பீர்கள்.

துலாம்:

சித்திரை 3, 4: நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். செயல்களில் தடை, தாமதம் இன்று ஏற்படும்.
சுவாதி: எதிர்பார்த்திருந்தவற்றில் ஏமாற்றம் உண்டாகும். குடும்பத்தினரின் அதிருப்திக்கு இன்று ஆளாவீர்கள்.
விசாகம் 1, 2, 3: உங்கள் முயற்சிகளில் சிரமம் காண்பீர்கள். நீண்ட இழுபறிக்குப்பின் ஒரு வேலை முடியும்

விருச்சிகம்:

விசாகம் 4: அரசு பணியாளர்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள். அதிகாரிகளின் கோபம் உங்கள் மீது திரும்பலாம்.
அனுஷம்: முயற்சிகளில் தடைகளை சந்திப்பீர்கள். மற்றவர்களுக்கு பதில் சொல்லும் நிலை இன்று உண்டாகும்.
கேட்டை: வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் இன்று அனுகூலம் காண முடியாமல் போகும்.

தனுசு:

மூலம் தடைபட்ட வருமானம் கைக்கு வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டமான நாள்.
பூராடம்: விடாமுயற்சியால் நினைத்ததைச் சாதிப்பீர்கள். உங்களின் தனித்திறமை இன்று வெளிப்படும்.
உத்திராடம் 1: பிறர் நலனில் அக்கறை கொள்வீர்கள். பணப்புழக்கம் கூடும். குடும்பத்தினரின் தேவை நிறைவேறும்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: பண விவகாரத்தில் கவனம் தேவை புதிய முதலீடுக்குரிய முயற்சியைத் தள்ளிப் போடுவதால் இழப்பில் இருந்து விடுபடலாம்.
திருவோணம்: குடும்பத்தினரின் நெருக்கடியால் சங்கடங்களுக்கு ஆளாகலாம். வார்த்தைகளில் நிதானம் தேவை. அவிட்டம் 1, 2: வரவிற்கு மீறிய செலவுகளை சந்திக்கலாம். உறவுகளால் சங்கடங்கள் உண்டாகும்.

கும்பம் :

அவிட்டம் 3, 4: மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
சதயம்: குழப்பங்களைத் தவிர்த்தால் உங்களுடைய முயற்சிகள் வெற்றியாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
பூரட்டாதி 1, 2, 3: உங்களுடைய முயற்சியில் ஒன்று இன்று வெற்றியாகும். உங்களிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம் :

பூரட்டாதி 4: திடீர் செலவால் தடுமாறுவீர்கள். வெளியூர் பயணங்களால் சங்கடத்தை சந்திப்பீர்கள்.
உத்திரட்டாதி: வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வின்றி செயல்படுவீர்கள். பதட்டமின்றி செயல்படுவதால் நன்மை உண்டு.
ரேவதி: திட்டமிட்டிருந்த வகையில் செலவு அதிகரிக்கும். நவீன பொருட்களை இன்று வாங்குவீர்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts