பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (08-06-2022)

மேஷம்: அசுவினி: பிரச்னைகள் இன்று முடிவிற்கு வரும். செலவு அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானம் வரும்.
பரணி: சுய ஆற்றல் வெளிப்படும். உங்கள் செயல்களைக் கண்டு எதிரிகள் பின் வாங்குவார்கள்.
கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட்டு செல்வாக்கை நிரூபிப்பீர்கள். மகிழ்ச்சியான மனநிலை உண்டாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: எதிர்பார்த்த நன்மை தள்ளிப் போகும். பிள்ளைகளின் வழியே செலவு உண்டாகும்.
ரோகிணி: சங்கடம் விலகும். உங்களுடைய அறிவாற்றலால் பிரச்னைகளில் இருந்து வெளியில் வருவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: பெற்றோரின் ஆதரவால் பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4: அரசு வழி முயற்சிகளில் எதிர்பார்க்கும் நன்மையை அடைய முடியாமல் போகும்.
திருவாதிரை: எதிர்பார்த்தவற்றில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப நெருக்கடி தீரும். சுமாரான நாள்.
புனர்பூசம் 1, 2, 3: அரசு விஷயத்தில் கவனம் தேவை. வில்லங்க விஷயத்தில் ஈடுபட வேண்டாம்.

கடகம்: புனர்பூசம் 1, 2, 3: தடைகளை சரி செய்வீர்கள். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூசம்: நீண்ட நாள் பிரச்னைகள் இன்று முடிவுக்கு வரும். தனித்திறமை வெளிப்படுத்தி புகழடைவீர்கள்.
ஆயில்யம் நெருக்கடிக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். எதிரியால் ஏற்பட்ட சங்கடம் தீரும். யோகமான நாள்.

சிம்மம்: மகம்: சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருள்களை கையாள்வதில் எச்சரிக்கை கவனம் தேவை.
பூரம்: குடும்ப நிலை உயரும். புதிய சொத்து, நவீன சாதனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்திரம் 1: யோசிக்காமல் செயல்பட்டு அதன் வழியே சங்கடத்தை அடைவீர்கள். பணம் செலவாகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். மனம் மகிழும்படியான சூழல் உருவாகும்.
அஸ்தம்: வீட்டில் திருமணப் பேச்சு எழும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன்கள் தேடி வரும்.
சித்திரை 1, 2: குருவருளால் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும்.

துலாம்: சித்திரை 3, 4: எதிர்பாராத வகையில் திடீர் செலவு தோன்றும். மனதில் வீண் குழப்பம் வந்து செல்லும்.
சுவாதி: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. மனம் விரும்பாத சம்பவம் ஒன்று இன்று நடைபெறும்.
விசாகம் 1, 2, 3: மனம் ஒருநிலையில் இல்லாமல் போகும். செயல்களில் தடுமாற்றம் உண்டாகும்.

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செயல்களில் இன்று வெற்றி சந்திப்பீர்கள். யோகமான நாள்.
அனுஷம்: உங்கள் மனம் உற்சாகமடையும். முயற்சியில் இன்று சாதகமான நிலை உருவாகும்.
கேட்டை: எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள். எதிர்பார்த்தவற்றில் லாபமான நிலையை இன்று காண்பீர்கள்.

தனுசு : மூலம்: வேலை தேடியவர்களுக்கு நல்ல தகவல் வரும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும்.
பூராடம்: உங்களுடைய ஆற்றல் வெளிப்படும். முயற்சியில் தடை விலகி நினைத்ததை அடைவீர்கள்.
உத்திராடம் 1: சிந்தித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: எதிர்பார்த்த விஷயத்தில் தாமதம் ஏற்படும். உங்களை சிலர் விமர்சனம் செய்வார்கள்.
திருவோணம்: பிரச்னைகள் விலகும். செயல்களில் வேகம் உண்டாகும் என்றாலும் முடிவு தாமதமாகும்.
அவிட்டம் 1, 2: தந்தைவழி உறவுகளால் நன்மை உண்டாகும். குடும்ப பிரச்னை விலகி சந்தோஷமடைவீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: மனநிலை பாதிக்கும் வகையில் சிலர் செயல்படலாம். கவனமுடன் செயல்படுவது நல்லது.
சதயம்: தேவையற்ற சங்கடங்களால் சோர்வு ஏற்படும். பயணத்தில் எச்சரிக்கையும் கவனமும் தேவை.
பூரட்டாதி 1, 2, 3: புதிய பிரச்னை ஒன்றை சந்திப்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும்.

மீனம்: பூரட்டாதி 4: உற்சாகமுடன் செயல்படுவீர்கள்.குழப்பம் விலகி தெளிவடைவீர்கள். ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி: புதிய சிந்தனை மேலோங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நண்பர்கள் உதவுவர். .
ரேவதி: கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts