பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (07-06-2022)

மேஷம் : அசுவினி: நிதானித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர் ஆலோசனைக்கு இடம் கொடுக்க வேண்டாம்.
பரணி: உறவினர் எதிராக செயல்படுவர். முடிவிற்கு வரக்கூடிய முயற்சி கடைசி நேரத்தில் தள்ளிப்போகும்.
கார்த்திகை1: இன்று நீங்கள் எதிர்பார்த்தவை சங்கடத்தில் முடியும். அந்நியரை நம்பி ஈடுபடும் முயற்சி வீணாகும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: அடுத்தவர் பிரச்னையில் தலையிட வேண்டாம். வழக்கில் எதிர்மறையான பலன் கிடைக்கும்.
ரோகிணி: வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் இன்று வேண்டாம்.
மிருகசீரிடம் 1, 2: சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். நேர்மையை பின்பற்றுவது நல்லது.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: பொருளாதார நெருக்கடி விலகும். பழைய கடன்கள் பைசலாகும். லாபமான நாள்.
திருவாதிரை: எதிர்பார்த்ததை இன்று அடைவீர்கள். உங்கள் நிலையில் உயர்வு உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3: முயற்சிகளில் லாபம் காண்பீர்கள். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். யோகமான நாள்.

கடகம் : புனர்பூசம் 1, 2, 3: பணம், நகை விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் இழப்புகளை சந்திக்க நேரிடும்.
பூசம்: பேச்சில் கவனம் தேவை. இன்று நிதானம் அவசியம். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
ஆயில்யம் கடனில் இருந்து விடுபட முயற்சிப்பீர்கள். ங்கள் செயல்களில் இன்று நெருக்கடி அதிகரிக்கும்.

சிம்மம் : மகம்: மனக்குழப்பம் வரலாம். எந்த ஒன்றிலும் சரியான முடிவிற்கு வரமுடியாமல் திண்டாடுவீர்கள்.
பூரம்: மனதில் புதிய எண்ணம் உருவாகி ஆசை அதிகரிக்கும். தவறான வழியில் பணம் தேட வேண்டாம்.
உத்திரம் 1: எதிரிகள் பலம் பெறுவர் முயற்சிகளில் தடை உண்டாகி உங்களை சங்கடப்படுத்தும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: எதிர்பாராத பயணம் உண்டாகும். உங்களுடைய செயல்கள் விடாமுயற்சியால் நிறைவேறும்.
அஸ்தம்: பணம் பல வழிகளிலும் செலவாகும். அத்தியாவசிய முயற்சிகளை மட்டும் இன்று மேற்கொள்ளவும்.
சித்திரை 1, 2: உங்கள் முயற்சிகள் நிறைவேறும். வருவாய்க்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும்.

துலாம் : சித்திரை 3, 4: அடிப்படைத் தேவை இன்று நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் கைக்கு வந்து சேரும்.
சுவாதி: புதிய நட்புகளிடம் கவனம் தேவை. அவசரப்பட்டு யாருக்கும் எந்த உதவியும் செய்ய வேண்டாம்.
விசாகம் 1, 2, 3: நெருக்கடி விலகும். பண வரவில் இருந்த தடை நீங்கும். எதிர்பாராத நன்மை கிடைக்கும்.

விருச்சிகம் : விசாகம் 4: தொழில் நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். செல்வாக்கில் உயர்வு உண்டாகும்.
அனுஷம்: அமைதியுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வாழ்க்கை நிலை உயரும். நன்மை சேரும்.
கேட்டை: வேலையில் இருந்த பிரச்னை திரும். உங்கள் திறமையறிந்து பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

தனுசு : மூலம்: மனதில் இருந்த சங்கடம் விலகும். சுறுசுறுப்பாக செயல்பட்டு தேவையை நிறைவேற்றுவீர்கள்.
பூராடம்: உங்கள் அணுகுமுறையில் மாற்றம் உண்டாகும். எதிரிகள் பணிவர். நினைத்ததை சாதிப்பீர்கள்.
உத்திராடம் 1: செல்வாக்கு உயரும். உங்கள் ஆலோசனைகளை விஐபிகள் ஏற்பர். வெற்றி காண்பீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும்.
திருவோணம்: பயணத்தில் கவனம் தேவை. மனதை பாதிக்கும் வகையில் சில சம்பவங்கள் நடக்கலாம்.
அவிட்டம் 1, 2: அறிமுகம் இல்லாதவரிடம் பழக வேண்டாம். தவறான செயல்களில் ஈடுபடுவது கூடாது.

கும்பம் : அவிட்டம் 3, 4: குடும்ப பிரச்னை முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கை இன்று நிறைவேற்றுவீர்கள்.
சதயம்: உங்களை விட்டு விலகியவர்கள் தேடி வருவர். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: செல்வாக்கு உயரும். எதிரிகள் விலகுவர். தந்தை நலனில் கவனம் தேவை.

மீனம் : பூரட்டாதி 4: உடல் நிலை சீராகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும்.
உத்திரட்டாதி: கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வர்.
ரேவதி: வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள். இல்லையெனில் நண்பர் கூட திரியாகலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts