பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (25-05-2022)

மேஷம் :

அசுவினி: கையிருப்பு இன்று பல வழியிலும் செலவுகள் உண்டாகும். கவனம் தேவை.
பரணி: வருமானத்திற்கு ஏற்ப செலவும் வந்து நிற்கும். ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
கார்த்திகை 1: நண்பர்கள் வழியே சங்கடத்தை சந்திக்கலாம். கவுரவத்திற்காக வீண் செலவு செய்வீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4: வருமானத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
ரோகிணி: தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு பணவரவு வந்து சேரும். தொழிலில் லாபம் கூடும்.
மிருகசீரிடம் 1, 2: நண்பர்கள் உதவுவர். புதிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: தொழிலில் இருந்த தடை விலகும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். அரசுவகையில் ஆதயாம் உண்டு.
திருவாதிரை: புத்திசாலித்தனத்தால் தொழிலில் ஏற்பட்ட சரிவை சரிசெய்வீர்கள். அந்நியர் உதவியால் நினைத்தது நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: உங்களுடைய ஆற்றல் இன்று வெளிப்படும். பூர்வீக சொத்தில் நிலவிய பிரச்னையை சரிசெய்வீர்கள்.

கடகம் :

புனர்பூசம் 4: புதிய சிந்தனை மேலோங்கும். இழுபறியான செயலையும் பெரியோர் ஆதரவுடன் முடிவிற்கு கொண்டு வருவீர்கள்.
பூசம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பொறுப்பு இன்று உங்களை வந்து சேரும்.
ஆயில்யம் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோல் உணர்வீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம் :

மகம்: புதிய வேலைகளில் இன்று ஈடுபட வேண்டாம். மனதை பாதிக்கும் சம்பவங்கள் இன்று நடக்கலாம்.
பூரம்: நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள். பயணத்தில் கவனம் தேவை. முயற்சிகள் இன்று இழுபறியாகும்.
உத்திரம் 1: வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி தாமதமாக கிடைக்கும்.

கன்னி :

உத்திரம் 2, 3, 4: இனிய சம்பவம் நடைபெற்று மகிழ்வீர்கள். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம்: கணவன் மனைவி பிரச்னைகள் விலகும். நண்பர்களால் எதிர்பார்த்ததை விட ஆதாயம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். செலவு அதிகரிக்கும்.

துலாம்:

சித்திரை 3, 4: உங்கள் செயல்களால் இன்று ஆதாயம் காண்பீர்கள். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
சுவாதி: மனதில் இருந்த சங்கடம் விலகும். தடைகளை உடைத்து வெற்றி காண்பீர்கள். யோகமான நாள்.
விசாகம் 1, 2, 3: எதிரி தொல்லை மறையும். உங்களின் அணுகுமுறையால் நினைத்ததை சாதிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம் :

விசாகம் 4: செயல்களில் இன்று சில தடைகளை சந்திப்பீர்கள். எளிதாக முடியவேண்டிய வேலை இழுபறியாகும்.
அனுஷம்: கவனக்குறைவால் முயற்சிகளில் தடைகளை சந்திப்பீர்கள். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
கேட்டை: எளிதாக முடிய வேண்டிய வேலை இழுபறியாகும். உறவுகளின் உதவியால் நன்மை அடைவீர்கள்.

தனுசு:

மூலம் அரசு வகையில் பிரச்னை வரலாம். சட்டத்திற்கு புறம்பான செயல்களால் சங்கடம் உண்டாகலாம்.
பூராடம்: புதிய முயற்சிகள் இழுபறியாகும். செல்வாக்குடையவர்களின் சந்திப்பால் நன்மை காண்பீர்கள்.
உத்திராடம் 1: நிதானமாக செயல்பட்டு நன்மை காண வேண்டிய நாள். எதிர்பார்த்த பணவரவு இல்லாமல் போகும்.

மகரம்:

உத்திராடம் 2, 3, 4: புதிய அணுகுமுறையால் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.
திருவோணம்: நெருக்கடிகளை துணிச்சலுடன் சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் 1, 2: விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவர். உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.

கும்பம் :

அவிட்டம் 3, 4: கவனக்குறைவால் நஷ்டங்களை சந்திக்கலாம். புதிய முதலீடு குறித்த முயற்சி இன்று வேண்டாம்.
சதயம்: அலட்சியத்தால் சிலவற்றை தவற விடுவீர்கள். வீண்செலவால் குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாவீர்கள்
பூரட்டாதி 1, 2, 3: குடும்பத்தினரால் நெருக்கடி ஏற்படலாம். வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: மனதில் தெளிவு பிறக்கும். உங்களைச் சுற்றி இருப்பதில் நல்லவர், கெட்டவர் யார் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.
உத்திரட்டாதி: மனதில் ஓய்வு குறித்த எண்ணம் மேலோங்கும். வேலைப்பளுவால் சோர்வுக்கு ஆளாவீர்கள்.
ரேவதி: விருப்பம் போல செயல்பட்டு வருவீர்கள். குடும்பத்தினரால் பிரச்னைகள் உருவாகி உங்களை சங்கடப்படுத்தும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts