பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (22-05-2022)

மேஷம்: அசுவினி: புதிய முயற்சியில் இறங்கி வெற்றி பெறுவீர்கள். உங்களை நம்பி சிலர் முக்கிய பொறுப்பை ஒப்படைப்பர்.
பரணி: உங்கள் செயல்கள் முன்னேற்றம் பெறும். குடும்பத்தினருடன் பயணம் செல்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கார்த்திகை 1: நண்பர்களின் ஆதரவால் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலை சாதகமாக அமையும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: பெரியவர்களின் ஆதரவு உண்டாகும். இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும்.
ரோகிணி: கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னை தீரும். உறவினர் வருகையால் சந்தோஷம் தோன்றும்.
மிருகசீரிடம் 1, 2: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் புதிய வழிகளைக் கண்டு லாபம் காண்பீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பயணத்தில் கவனம் தேவை. இன்று மாலை வரை முயற்சியில் இழுபறி என்றாலும் பிறகு நன்மை சேரும்.
திருவாதிரை: நினைத்ததை நிறைவேற்ற முடியாமல் சங்கடப்படுவீர்கள். தேவையற்ற பிரச்னை தலைதுாக்கும்.
புனர்பூசம் 1, 2, 3: தொழிலில் நெருக்கடிக்கு ஆளாகலாம். வருமானம் குறையும். குடும்பத்தால் குழப்பம் உண்டாகும்.

கடகம் : புனர்பூசம் 4: குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உங்களுடைய செல்வாக்கால் இன்று நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.
பூசம்: இன்று மாலை வரை செயல்களில் வெற்றி உண்டாகும். பிறகு நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
ஆயில்யம் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். நண்பர்களின் வழியே எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.

சிம்மம் : மகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பண வரவு இன்று வரும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
பூரம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்காலத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
உத்திரம் 1: தொலைந்து போன பொருள் ஒன்று இன்று கைக்கு வரும். மனதில் இருந்த பிரச்னை மறையும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: இன்று மாலை வரை செயல்களில் மந்தம் நிலவும். எதிர்பார்ப்புகள் இழுபறியாகும்.
அஸ்தம்: பிள்ளைகளின் வழியே சங்கடங்கள் உண்டாகும். பொருளாதார சிக்கலால் நினைத்தபடி செயல்பட முடியாது. சித்திரை 1, 2: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பழைய பிரச்னை ஒன்றிற்கு முடிவு கட்டுவீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: உறவினரால் உதவி உண்டாகும். நினைத்த செயலில் உங்கள் முயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.
சுவாதி: பணப்பிரச்னையால் செயலில் பின்னடைவு உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறுவீர்கள்.
விசாகம் 1, 2, 3: தேவையற்ற பயம் வந்து போகும். பலம் பலவீனத்தை இன்று உணர்வீர்கள். யோசித்து செயல்படவும்.

விருச்சிகம்: விசாகம் 4: திறமையின் காரணமாக செயலில் லாபத்தை அடைவீர்கள். உறவினரால் உதவி கிடைக்கும்.
அனுஷம்: சவாலான ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். செயலில் உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும்.
கேட்டை: தொழில் முன்னேற்றமாகும். எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். நினைத்ததை சாதிப்பீர்கள்.

தனுசு : மூலம் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். செலவுகள் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.
பூராடம்: புதியவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உண்டாக்கும். எதிர்பார்த்தவற்றில் இருந்து லாபம் வந்து சேரும்.
உத்திராடம் 1: தொழிலை விரிவு செய்வீர்கள். நண்பர் உதவியால் பொருளாதார நிலை மேம்படும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: விருந்து, விசேஷம் என செல்வீர்கள். மாலை வரை அலைச்சல் இருக்கும். குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும்.
திருவோணம்: செல்வாக்கு மிக்கவர்களை சந்திப்பீர்கள். அவர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் 1, 2: குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: செலவு கூடும். வீட்டிற்குத் தேவையானதை வாங்குவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி ஆலோசிப்பீர்கள்.
சதயம்: கோயிலுக்குச் செல்வீர்கள். இன்று மாலை வரை சங்கடத்தை சந்தித்தாலும் அதன்பின் மகிழ்ச்சி காண்பீ்ரகள்.
பூரட்டாதி 1, 2, 3: வீடு கட்டும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். சுபநிகழ்ச்சி நடத்துவது பற்றி யோசிப்பீர்கள்.

மீனம் : பூரட்டாதி 4: எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் வீட்டிற்கு செல்வீ்ர்கள்.
உத்திரட்டாதி: எதிர்காலம் குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும்.
ரேவதி: இன்று மாலை வரை மகிழ்ச்சியாக செல்லும். அதன் பிறகு புதிய பிரச்னைகள் ஏற்பட்டு அதற்காக செலவுகள் உண்டாகும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts