பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (17-05-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். புத்தி சாதுரியம் ஏற்படும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.

ரிஷப ராசி

நேயர்களே, வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனைகள் வரும். உடல் நலம் சீராகும். புது முயற்சிகளை தள்ளி போடவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்ப வருமானம் உயரும். மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடக ராசி

நேயர்களே, புதிய கோணத்தில் சிந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். விருப்பங்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்ப விவகாரங்களை கவனமாக கையாளவும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். முக்கிய திருப்பங்களை சந்திக்க வேண்டிவரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி

நேயர்களே, முன்கோபத்தை தவிர்க்கவும். திறமையான செயல்களால் மரியாதை கூடும். கணவன் மனைவிடையே நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் அகலும். பெண்கள் வகையில் சில பிரச்சனைகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். வாகனப் பராமரிப்புச் செலவு கூடும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு ராசி

நேயர்களே, சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மகர ராசி

நேயர்களே, சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும், பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். நண்பர்களிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கும்ப ராசி

நேயர்களே, எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். எதிர்ப்புகள் நாளடைவில் நீங்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மீன ராசி

நேயர்களே, தெய்வீக எண்ணம் அதிகரிக்கும். பிரபலங்களால் நன்மை உண்டு. எடுத்த காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts