பிந்திய செய்திகள்

உங்கள் பரிகாரம் சிறக்க இதை பசு மாட்டிற்கு கொடுங்கள்!!

நம்மில் நிறைய பேர் நம்முடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று கோயில் குளமாக ஏறி இறங்கி பரிகாரங்களையும் வழிபாட்டு முறையையும் செய்வோம். ஆனால் ஏனோ தெரியவில்லை, நாம் செய்யக்கூடிய பரிகாரங்களும் பூஜை புனஸ்காரங்கள் நமக்கான பலனைக் கொடுக்காது.

நீங்கள் ஒருமுறை பரிகாரம் செய்வதற்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். அதாவது பசுமாட்டிற்கு இந்த பொருளை சாப்பிட கொடுத்து விட்டு அதன் பின்பு வரக்கூடிய நாட்களில் நீங்கள் பரிகாரம் செய்தால், அந்த பரிகாரத்திற்கு முழுபலன் உண்டு. வெள்ளை மொச்சை, கொண்டைக்கடலை இந்த இரண்டு தானியத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

முந்தைய நாள் இரவே தண்ணீரில் போட்டு ஊற வைத்து விட்டு, இதை நன்றாக அரைத்து இதோடு வெல்லம் சேர்த்து கலந்து பசுமாட்டிற்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து விட்டு பிறகு நீங்கள் எந்த தோஷ நிவர்த்தி பரிகாரத்தை செய்தாலும் அதன் மூலம் உங்களுக்கு உடனடி பலன் உண்டு.

அடுத்தபடியாக நவ தானியங்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சவுகரியம் தான். 1/2 கிலோ அளவு, 1 கிலோ அளவு எவ்வளவு எடுத்துக் கொண்டாலும் சரி, அதை ஒரு வெள்ளைத்துணியில் வைத்து தலையணை போல மூட்டை கட்டி இரவு தூங்கும் போது உங்கள் தலை கடையில் வைத்து தூங்கி விடுங்கள்.

மறுநாள் காலை எழுந்து தலைக்கு அடியில் வைத்து தூங்கிய நவதானியங்களை எடுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். ஊறவைத்த நவதானியத்தை பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும். உங்களை பிடித்த கஷ்டங்கள் அனைத்தும் தோஷங்கள் அனைத்தும் உங்களை விட்டு நீங்க இது ஒரு சிறந்த பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது.

இது தவிர எந்த ஒரு பரிகாரத்தை செய்வதற்கு முன்பும் உங்களுடைய தாய் தந்தையரின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும். அடுத்தபடியாக குலதெய்வத்திடம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டு அதன்பின்பு பரிகாரங்கள் செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

அடுத்தபடியாக உக்கிரமான அம்மன் கோவில் வழிபாடு செய்வது, பழமையான சிவன் கோவிலுக்கு சென்று பரிகார தீபங்கள் ஏற்றுவது, சுயம்புவாக உருவான புற்று கோவில் உள்ள இடங்களுக்கு சென்று வழிபாடு செய்வது, மகான்களின் சமாதிக்குச் சென்று தியான நிலையில் வழிபாடு செய்வது போன்ற விஷயங்கள் உங்களுடைய கஷ்டங்களுக்கு உடனடி தீர்வை கொடுக்க கூடியதாக அமையும்.

உங்களால் முடிந்தால் கோவிலில் இருக்கக்கூடிய யானைக்கு முடிந்த உணவினை வாங்கி கொடுக்கலாம். யானை கட்டி தீனி போட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் உங்களால் முடிந்த வெல்லம், தேங்காய், கரும்பு, வாழைப்பழம் போன்ற பொருட்களை யானைக்கு வாங்கி கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். குளங்களில் உள்ள மீனுக்கு உங்களால் முடிந்த ஒரு கைப்பிடி பொறியாவது வாங்கி உணவாக போடுங்கள். மீன்கள் யானை பசுமாடு இந்த மூன்றும் ஜீவராசிகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய தானம் நம் குடும்பத்தின் தலை காக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts