பிந்திய செய்திகள்

பிரெட் ரோல்

தேவையான பொருட்கள்

வெள்ளை அல்லது பிரவுன் பிரெட் – 1 பாக்கெட்,

மைதா – 50 கிராம்,

எண்ணெய் – பொரிப்பதற்கு

ஃபில்லிங் செய்ய…

பனீர் – 100 கிராம்,

வேக வைத்த உருளைக் கிழங்கு – 100 கிராம்,

சீஸ்- 100 கிராம்,

பொடியாக நறுக்கிய குடை மிளகாய் – 1.

மசாலா செய்ய…

சாட் மசாலா – 1 டீஸ்பூன்,

பிளாக் சால்ட் – கால் டீஸ்பூன்,

மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்,

உப்பு- தேவைக்கேற்ப.

செய்முறை

ஃபில்லிங் செய்யக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாகச் சேர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

மைதாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலாக்கவும்.

பிரெட் ஸ்லைஸ்களை சப்பாத்திக் கட்டையில் வைத்து மெலிதாக உருட்டவும்.

உள்ளே ஃபில்லிங்கை வைத்து, மூடி, மைதா கரைசலால் ஒட்டவும்.

சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.தற்போது சூப்பரான பிரெட் ரோல் ரெடி

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts