இளநீர் சூப்

தேவையான பொருட்கள்:

இளநீர் – 1
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கேரட் – சிறியது 1
பீன்ஸ் – 2
காய்ச்சிய பால் – 2 தேக்கரண்டி
மிளகு தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வழுக்கை உள்ள இளநீரை வாங்கிக்கொள்ளவும். இளநீர் வழுக்கையை, கால் கப் இளநீருடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.

காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த இளநீர் வழுக்கை விழுது, மிளகு தூள், உப்பு மற்றும் மீதியுள்ள இளநீர் சேர்த்து, கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்ததும், பால் ஊற்றி கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான, ‘இளநீர் சூப்’ தயார். மிகவும் சுவையாக இருக்கும்.