பிந்திய செய்திகள்

பசலைக்கீரை பொரியல் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள் :

பசலைக்கீரை – 1/2 கட்டு,
தேங்காய்த்துருவல் – 1 கப்,
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
காய்ந்த மிளகாய் – 2,
சீரகம் – 1 டீஸ்பூன்,
நறுக்கிய பெரிய வெங்காயம் – 1.

செய்முறை :

கீரையை கழுவி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, வெங்காயம், காய்ந்தமிளகாயை போட்டு வதக்கி, கீரையைச் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து வேக விடவும். பின்பு உப்பு, தேங்காய்த்துருவலைச் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்பு:

கூடுமானவரை கீரையைக் குக்கரில் வேகவைத்தால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகாது. செங்கீரை, முருங்கைக்கீரை, தண்டுக்கீரை, மணத்தக்காளிக்கீரை போன்ற கீரைகளிலும் பொரியல் செய்யலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts