பிந்திய செய்திகள்

சுவையான வெண்ணிலா ஐஸ்கிரீம் எப்படி செய்வது..?

அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை ஆன் செய்து அரை லிட்டர் பாலை ஊற்றவும். பாலை காய்த்து கொள்ளவும்.

பால் அடுப்பில் இருக்கும் நேரத்தில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் 2 கரண்டி corn flour மாவு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 4 கரண்டி பால் சேர்த்து கட்டிகள் ஏதும் இல்லாமல் நன்றாக கலக்கவும்.

தற்போது பால் பொங்கி வரும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கலக்கி வைத்த கான் ப்ளார் மாவை ஊற்றவும். ஊற்றிய பின் இரண்டு நிமிடத்திற்கு நன்றாக கலக்கவும். பின் அரை கப் அளவு சர்க்கரையை சேர்க்கவும்.பின் 3 நிமிடத்திற்கு நன்றாக கலக்கவும்.

இப்போது அடுப்பை off செய்து கொள்ளவும். off செய்த பின்னர் வெண்ணிலா எசன்ஸ் அரை கரண்டி எடுத்து பாலில் ஊற்றவும். பின்னர் நன்றாக கலக்கவும். இதனை செய்து முடித்த பின்னர் அரை மணி நேரம் நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும்.

அரை மணி நேரம் ஆறிய பின்னர், இந்த பாலை மிக்ஸி ஜாரில் ஊற்றி 2 முறை 10 வினாடிகளுக்குஅரைக்கவும். அப்போது தான் ஐஸ் கிரீம் மிகவும் soft ஆக கிடைக்கும்.

அடுத்ததாக ஐஸ் கிரீம் செய்வதற்காக டிபன் பாக்ஸ் போன்ற ஒரு மூடி உள்ள பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். பிளாஸ்டிக்கிலும் எடுத்துக் கொள்ளலாம். இப்போது செய்து வைத்த ஐஸ் கிரீம் பாலை எடுத்த பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். சில்வர் பாத்திரத்தை நீங்கள் எடுத்திருந்தால் அலுமினியத்தால் ஒன்று வைத்து பின் மூடவும்.

பிளாஸ்டிக் என்றால் அப்படியே மூடிக் கொள்ளலாம். இதனை பிரீசெரில் ( freezer ) 5 மணி நேரம் வைக்கவும். 5 மணி நேரம் கழித்து வெளியே எடுக்கவும். தற்போது பாதி ஐஸ் கிரீம் தயாராக இருக்கும். இந்த நிலையில் இந்த ஐஸ் கிரீமை மறுபடியும் ஒரு முறை மிக்ஸி ஜாரில் அரைக்கவும். இந்த செயல் முறை மிகவும் முக்கியமான ஒன்று.

அரைத்த பின் மறுபடியும் அதே பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். முன்னர் செய்தது போலவே மூடிவிட்டு பிரீசெரில் வைக்கவும். குறைந்தது 8 மணி நேரமாவது பிரீசெரில் வைத்திருக்க வேண்டும்.

அவ்வளவு தான்… 8 மணி நேரம் கழித்து பிரீசரில் இருந்து சுவையான ஐஸ் கிரீமை வெளியே எடுத்து விடலாம். மிகவும் எளிமையாக ஆரோக்கியமாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே வெண்ணிலா ஐஸ்கிரீம் முயற்சி செய்து பாருங்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts