பிந்திய செய்திகள்

சுவையான பலாக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்

பலாக்காய் – 500 கிராம்

பூண்டு – 6 பல்

இஞ்சி – 1 அங்குலம்

கரம் மஸாலாத்தூள் – 3 சிட்டிகை

தனியாத்தூள் – 1 தேக்கரண்டி

புதினா இலை – 1 தேக்கரண்டி

கொத்த மல்லி இலை – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 3 சிட்டிகை

மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

தேங்காய்த் துறுவல் – 2 மேஜைக் கரண்டி

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – 1 மேஜைக் கரண்டி

செய்முறை :

பலாக்காயின் தோலை நீக்கி விட்டு மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரை கொதிக்க வைத்து, பலாக்காய் துண்டுகளைப் போட்டு வேக வைக்கவும்.

இஞ்சி, பூண்டை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.

அதன் பின் வேக வைத்த பலாக்காய் துண்டுகளைப் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மஸாலாத்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் இவற்றைப் போட்டுக் கிளறவும்.

5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து, அதன்பின் கொத்தமல்லி இலை, தேங்காய்த் துறுவல், புதினா இலை போட்டு இறக்கி பரிமாறவும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts