தேவையானவை:
நூடுல்ஸ் – கால் கப்,
கேரட், குடமிளகாய்,
வெங்காயத்தாள்,
பச்சை மிளகாய் – தலா ஒன்று,
சோள மாவு,
எலுமிச்சைச் சாறு,
எண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கவும். சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கேரட், குடமிளகாயை முக்கால் வேக்காடு பதத்தில் வதக்கவும். தண்ணீர் 2 கப் சேர்த்து, கொதிக்கும்போது நூடுல்ஸை சேர்க்கவும்.
வெந்த பிறகு பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீரில் கரைத்த சோள மாவை சேர்த்துக் கொதிக்கவைக்கவும்.
சூப் சிறிது கெட்டியாக வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு, வெங்காயத்தாள் சேர்த்து… உப்பு, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.