பிந்திய செய்திகள்

புழுங்கல் அரிசி புட்டு

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – ஒரு ஆழாக்கு,

தேங்காய் – கால் மூடி,

சர்க்கரை – 4 ஸ்பூன்,

ஏலக்காய் – 3,

கல் உப்பு – அரை ஸ்பூன்,

நெய் – ஒரு ஸ்பூன்.

செய்முறை:

முதலில் ஒரு ஆழாக்கு புழுங்கல் அரிசியை ஒரு கிண்ணத்தில் சேர்க்க வேண்டும்.

அதனுடன் அரை ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

பிறகு இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்றாக பிசைந்து கழுவ வேண்டும்.

பிறகு இதனை ஒரு மணிநேரத்திற்கு அப்படியே ஊறவிட வேண்டும்.

பின்னர் ஊறவைத்த அரிசியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, அரிசியை மட்டும் ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்தி வைத்து, சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.

பின்னர் அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் 3 ஏலக்காய் சேர்த்து கொண்டு, அரிசியை ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ரவையை ஈரமான ஒரு துணியில் சேர்த்து கொண்டு துணியின் 4 முனைகளைக் கொண்டு அதனை மூடிக்கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அடுப்பின் மீது வைத்து, அதில் ஒரு இட்லி தட்டை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த இட்லி தட்டின் மீது வைத்துள்ள துணி மூட்டையை வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பத்து நிமிடத்திற்கு அரிசி மாவை வேக வைக்கவேண்டும். பின்னர் இட்லி பாத்திரத்தில் மூடியை திறந்து, அரிசி மூட்டையை வெளியே எடுத்து, அரிசி மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி, ஒரு கரண்டி வைத்து உலர்த்தி வைக்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் 4 ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்துவிட்டு, இதனுடன் கால் மூடி தேங்காயைத் துருவி சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து விட்டால் சுவையான புழுங்கல் அரிசி புட்டு தயாராகிவிடும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts