பிந்திய செய்திகள்

சத்து நிறைந்த கீரை தேங்காய்ப்பால் சூப்

தேவையான பொருட்கள் :.

கீரை – ஒரு கட்டு

சின்ன வெங்காயம் – 7

சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்

தேங்காய்ப்பால் – ஒரு கப்

பூண்டு – 4 பல்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :.

சுவையான கீரை தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி?
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சுத்தம் செய்த கீரை, பூண்டு, வெங்காயம், உப்பு, சீரகத்தூள்

ஆகியவற்றைக் குக்கரில் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி, மூன்று விசில் விட்டு இறக்கவும்.

ஆறிய பின் மசிக்கவும். ஒரு பாத்திரத்தில் கீரைக் கலவை, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

மேலே மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும். சூப்பரான கீரை தேங்காய்ப்பால் சூப் ரெடி.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts