பிந்திய செய்திகள்

நெல்லிகாய் குல்கொந்தை

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் – ஒரு கிலோ,

வெல்லம் – ஒன்னேகால் கப்,

தேன் – 100 கிராம்,

ஏலக்காய் பொடி – அரை ஸ்பூன்.

செய்முறை:

முதலில் நெல்லிக்காய்களில் இருக்கின்ற கொட்டைகளை நீக்கிவிட்டு, அவற்றை தேங்காய்துருவல் பயன்படுத்தி பொடியாக துருவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் துருவி வைத்துள்ள நெல்லிக்காய்களை ஒரு சிறிய கப் வைத்து எவ்வளவு இருக்கின்றது என்று அளந்துகொள்ள வேண்டும்.

பின்னர் இந்த அளவிற்கு பாதி அளவு வெல்லத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு நெல்லிக்காய் துருவலை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அடுப்பின் மீது வைக்க வேண்டும்.

பிறகு நெல்லிக்காய் துருவல் வைத்துள்ள பாத்திரத்தை இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி விட்டு, ஐந்திலிருந்து ஏழு நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து வைத்து வெல்லத்தை பொடி செய்து சேர்க்க வேண்டும்.

அவை நன்றாக கரைந்து இளகியதும் வேக வைத்த நெல்லிக்காய் துருவலை வெல்லத்துடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இவற்றை செய்யும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கலவை கெட்டியாக ஆரம்பிக்கும் பொழுது அரை ஸ்பூன் ஏலக்காய் தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இவை நன்றாக கெட்டியாகி வெல்லம் முழுவதுமாக நெல்லிக்காய் துருவலுடன் சேர்ந்து வெந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

பிறகு இவற்றை நன்றாக ஆற வைக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் இனிப்பு சுவைக்கு ஏற்ப 50 கிராம் அல்லது 100 கிராம் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இவை நன்றாக ஆறியதும் இதனை ஒரு கண்ணாடி டப்பாவில் சேர்த்து காற்று புகாதபடி மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்து வைத்தால் ஆறு மாதம் ஆனாலும் இவை கெட்டுப்போகாது.

இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவு இரண்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொடுக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts