Home சமையல் வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்

வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்

0
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

முந்திரிப் பருப்புகள் – 1/4 கிலோ

ஆப்பிள் சாறு – 1 கப்

பழுத்த வாழைப்பழங்கள் (பச்சைநாடன் போலப் பெரியது) – 3

பால் – 1 கப்

தேன் – 3 டேபிள் ஸ்பூன்

வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 1 டீ ஸ்பூன்

செய்முறை:

முந்திரிகளை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொண்டு அதனுடன் ஆப்பிள் சாறு ஊற்றி, கலவை மாவாக, நுண்ணிய தாக அரைபடும் வரை அரைக்கவும்.

இத்துடன் வாழைப்பழம், பால், தேன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் போட்டு மென்மை யானதாக அரைத்துக் கொள்ளவும்.

இதனை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் உறைய விடவும்.

இரவு முழுவது உறைந்த பின்னர், ஐஸ்கிரீம் கோப்பைகளில் போட்டு பறிமாறலாம். வெய்யிலுக்கு சாப்பிட இனிது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here