பிந்திய செய்திகள்

உணவு உண்டவுடன் செய்யக்கூடாத 5 விடயங்கள்

சாப்பிட்ட பின் செய்ய கூடாத பல விஷயங்களை செய்வதினால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க… அவற்றை இப்போது பார்க்கலாம்.

  1. சாப்பிட்ட உடன் குளிக்க கூடாது. வேகமாக அடுத்த வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் சாப்பிட்ட உடனே குளிக்க சென்று விடுவார்கள். நாம் சாப்பிட்ட உடனே அந்த உணவின் செரிமானம் தொடங்கி விடும். குளிக்கும்போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து செரிமான உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டம் கிடைக்காததால் செரிமான மந்த நிலை, அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  2. உணவு சாப்பிட்ட பிறகு பழங்கள் சாப்பிட கூடாது.

சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது
நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது தவறு. பழங்கள் சுலபமாக ஜீரணம் ஆகக் கூடியது. அதனால் பழங்கள் மட்டும் ஜீரணமாகி உணவு ஜீரணமாகாமல் இருக்கும். உணவு சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ பழங்களை எடுத்து கொள்ளபொதுவாக பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகளும் வெளியேறும்.

  1. சாப்பிட்ட உடன் தூங்குவது மிகவும் தவறு.

பொதுவாக சாப்பிட ஆரம்பித்த உடனே செரிமான பணிகள் வேகமாக தொடங்கி விடும். நாம் படுத்து விட்டால் உணவு தொண்டையை நோக்கி வர ஆரம்பிக்கும். அது மட்டும் இல்லாமல் இன்னும் சிலருக்கு செரிமான அமிலங்கள் தொண்டை வரையில் வந்து தொண்டை எரிச்சல், தொண்டை புண், மூச்சு குழாய் அழற்சி போன்றவற்றை ஏற்படுத்தி விடும். சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் வாயு மற்றும் பல பிரச்சனைகள் உண்டாகும்.

  1. சாப்பிட்ட உடனே கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய கூடாது. சாப்பிட்ட உடன் வேகமாக நடப்பது, ஓடுவது, கடினமான வேலைகளை செய்வது கூடாது. சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்தால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சென்று சேருவது தடைப்படும். உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கு இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். செரிமான உறுப்புகளில் இரத்த ஓட்டம் குறைவாகும் காரணமாக செரிமான மந்த நிலை மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதோடு உணவு சரியாக செரிமானம் ஆகாமல் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சென்று சேராது.
  2. சாப்பிட்ட உடனே தண்ணீர் பருக கூடாது.

பலர் சாப்பிடும் போது தண்ணீர் குடித்து கொண்டே இருப்பார்கள். அதே போல சாப்பிட்டு முடித்த உடனும் வயிறு முட்ட தண்ணீர் குடிப்பார்கள். பொதுவாக வயிற்றில் உள்ள அமிலமானது 1.5 – 3 ph வரை இருக்கும். இந்த அளவில் தான் உணவு அமிலத்துடன் சேர்ந்து நல்ல செரிமானம்அடையும். ஆனால் தண்ணீர் குடித்து விட்டால் வயிற்றில் உள்ள Hcl அமிலம் நீர்த்து விடும். இதனால் செரிமானம் தடைப்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts