பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (01-05-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் பெரியளவில் சந்தோஷம் ஏற்படும். எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து அகற்றவும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

ரிஷப ராசி

நேயர்களே, எதிர்பார்த்து காத்திருந்த நல்ல தகவல் வரும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். கடன் நெருக்கடி அவ்வப்போது இருக்கும். புதுத் தொழில் யோகம் அமையும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எதிர்காலம் பற்றிய கனவு இருக்கும். திருமணம் காரியம் கைகூடும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

கடக ராசி

நேயர்களே, குடும்ப ஒற்றுமை பலப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும்.

சிம்ம ராசி

நேயர்களே, வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். அடுத்தவர்கள் மனம் காயப்படும் படி பேச வேண்டாம். எதிரிகள் விலகுவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் நீங்கும். வீடு மாற்றம் பற்றிய யோசனை வரும். நண்பர்கள் உதவியை நாடி வருவர். உத்யோகத்தில் கவனம் தேவை.

துலாம் ராசி

நேயர்களே, குடும்ப நபர்களை அனுசரித்துப் போகவும். வீண் கோபம், மன உளைச்சல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. புது முயற்சிகள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி நேயர்களே,கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். பிரியமானவர்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தில் நிறைய செலவுகள் வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகர ராசி

நேயர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். பணவரவு ஓரளவு திருப்தியளிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்ப பெருமை உயரும். திட்டமிட்ட காரியம் நடக்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரும்.

மீன ராசி

நேயர்களே, எடுத்த காரியத்தை முடிப்பதில் சிரமம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts