Home ஆன்மீகம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கண்ணனே குழந்தையாக பிறக்க சக்தி வாய்ந்த கிருஷ்ண மந்திரம்..!

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கண்ணனே குழந்தையாக பிறக்க சக்தி வாய்ந்த கிருஷ்ண மந்திரம்..!

0
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கண்ணனே குழந்தையாக பிறக்க சக்தி வாய்ந்த கிருஷ்ண மந்திரம்..!

பூர்வ புண்ணிய பலன்கள் சிறப்பாக இருந்தால் தான் குழந்தை பாக்கியம் ஒரு மனிதனுக்கு எளிதாக கிடைக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். புண்ணிய பலன்கள் குறைந்து, பாவ பலன்கள் அதிகரித்து காணப்பட்டால் அந்த ஜாதகருக்கு புத்திர பாக்கியம் என்பதே இருக்காது!

136 Baby Krishna Photos Stock Photos, Pictures & Royalty-Free Images -  iStock

புத்திர பாக்ய தடைகள் நீங்கி அந்த கிருஷ்ணனே உங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்க சொல்ல வேண்டிய எளிய கிருஷ்ண மந்திரம் என்ன? இம் மந்திரத்தின் பொருள் யாது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

குழந்தை என்பது ஒரு வரமாக இன்று மாறி இருக்கிறது. பாவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மனிதனுக்கு புத்திர பாக்கியம் குறையும் என்று புராணங்கள் கூறுகிறது.

அந்த கூற்றுக்கு ஏற்ப அருகி வரும் குழந்தை பிறப்பு சான்றாக இருக்கிறது. புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கு எந்த குறையும் இல்லை என்றாலும் திருமணமான சில மாதங்களிலேயே மருத்துவமனை ஏறி இறங்க வேண்டி இருக்கிறது.

பாக்கியம் என்பது ஜாதகரின் 5ஆம் இடம் சிறப்பாக அமையப் பெற்றிருந்தால் கிடைக்கக் கூடியது ஆகும். ஐந்தாம் இடம் வலுவிழந்து காணப்பட்டால் உங்களுக்கு புத்திர பாக்கிய தடை ஏற்படுவது வழக்கம்.

தந்தையுடைய ஆத்மாவை அவர் இறந்த பின் ‘புத்’ என்கிற நரகத்திற்கு செல்லாமல் காப்பாற்றுபவன் புத்திரன் என்கிறது சாஸ்திரம்.

இந்த புத்திர பாக்கியம் ஒருவருக்கு இல்லாமல் போனால் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது. எப்படியாவது நமக்கென ஒரு குழந்தை பிறந்து விடாதா? என்று ஏங்குபவர்கள் இன்று பெருகி வருகிறார்கள்.

Lord Baby Krishna poster | HD poster for room decor (12x18-Inch, 300GSM  Thick Paper, Gloss Laminated) Paper Print - Religious, Children, Decorative  posters in India - Buy art, film, design, movie, music,

மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நாமும் மாறிக் கொண்டே இருப்பதால் ஏற்படும் விளைவு ஒருபுறம் இருந்தாலும், செய்யும் பாவங்களுக்கு ஏற்ப கர்ம வினைப் பயன்களை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மனிதன் தன் கர்ம வினைகளை அனுபவிக்கவே குழந்தையை ஈன்றெடுக்கிறான். அவனுடைய கர்ம வினைகள் குழந்தை வழியாகவே அவன் அனுபவிக்கின்றான். இந்த பாக்கியத்தை பெறக் கூடிய சக்தி வாய்ந்த கிருஷ்ண மந்திரம் இதோ உங்களுக்காக:

மந்திரம் 1: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளெம் தேவகி ஸுத கோவிந்தா: வாசுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத:

மந்திரம் 2: தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்

மந்திரத்தின் பொருள்:

முதல் மந்திரத்தில் தேவகியின் புத்திரனாக இருக்கக்கூடிய வசுதேவர் உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கின்றார். தங்களை சரணம் அடைகின்றோம், எங்களுக்கு ஒரு நல்ல குழந்தை பாக்கியத்தை அருளுமாறு கேட்டு கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது மந்திரத்தில் தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக ஜகத்தினை ஆளும் தேவனே எம் குலம் விருத்தி அடைய, எங்களுக்கு நல்ல தீர்க்காயுளுடன் கூடிய நல்ல குணாதிசயங்கள் பெற்றுள்ள குழந்தையை அருளுமாறு வேண்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மந்திரத்தை பூஜை அறையில் கிருஷ்ணன் படத்திற்கு முன்பு தம்பதியராக அமர்ந்து தினமும் மூன்று முறை உச்சரித்து வர விரைவிலேயே அந்த கிருஷ்ணனே உங்களுக்கு மகனாக பிறப்பான் என்பது நம்பிக்கை. செய்த பாவங்கள் தீரவும், கர்மவினை பயன்களுக்கு பரிகாரம் செய்யவும் உங்களால் முடிந்த மட்டும் பெற்றோர் இல்லாத அனாதை குழந்தைகளுக்கு உதவி செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here