பிந்திய செய்திகள்

சிரஞ்சீவி படத்தில் நீக்கப்பட்ட காஜல் அகர்வால்

நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் படம் ஆச்சார்யா. கொரட்டால சிவா இயக்கியிருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். பூஜா ஹெக்டே ராம்சரணூக்கு ஜோடி. ஆனால் டிரைலரில் காஜல் அகர்வாலின் காட்சிகள் எதுவும் இல்லை. இது குறித்து இணையத்தில் ரசிகர்கள் சிலர் காஜல் அகர்வால் காட்சியை இருட்டடிப்பு செய்து விட்டதாக எழுதினார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஆச்சார்யா பட வெளியீட்டு விழா நடந்தது. அப்போது இது பற்றி இயக்குனர் கொரட்டாலா சிவாவிடம் கேள்வி கேட்கபட்டது. அப்போது காஜல் பற்றி அவர் கூறியதாவது, இந்தப் படத்தில் காஜல் நடிக்கவில்லை. சில காட்சிகள் எடுத்தப் பிறகு காஜலிடம் ஒரு அவசரம் தெரிந்தது. சிரஞ்சீவியுடன் ஆலோசனை செய்து விட்டு காஜல் சம்பந்தமான காட்சிகளை எடுக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் காஜலின் பாத்திரத்தையே நீக்கும்படி ஆகிவிட்டது. படத்தில் சிரஞ்சீவி நக்சலைட்டாக நடிக்கிறார். ராம்சரண் ஜோடியான பூஜா ஹெக்டே நீலாம்பரி பாத்திரத்தில் நடிக்கிறார் என்று அவர் கூறினார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts