பிந்திய செய்திகள்

படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர்

நடிகர் மற்றும் இயக்குனராகிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் கடந்த 28-ம் தேதி வெளியான திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

முக்கோண காதல் கதையை கொண்ட இந்த படத்தில், கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு ட்வீட்…ரெண்டு அப்டேட்: 'காத்து வாக்குல ரெண்டு காதல்' பட ரசிகர்களை  குஷிப்படுத்திய விக்னேஷ் சிவன்..!! – Update News 360 | Tamil News Online |  Live News | Breaking ...

இந்நிலையில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கத்திற்கு விசிட் அடித்துள்ளனர். இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய்சேதுபதி ஆகியோர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா || Tamil cinema nayanthara theatre  visit

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தியேட்டருக்குள் நயன்தாரா வரும் போது அவரை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts