பிந்திய செய்திகள்

பெண்கள் காலில் அணியும் மெட்டியை அடிக்கடி மாற்றலாமா? மெட்டி இப்படி இருந்தால் உங்களுக்கு என்ன ஆகும்

ஒரு பெண்ணுக்கு நெற்றியில் குங்குமமும், கழுத்தில் திருமாங்கல்யமும், காலில் மெட்டியும் திருமணத்திற்கு சாட்சியாக இருந்து வருகிறது. இதில் ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு விசேஷ பலன்களை அந்த பெண்ணிற்கு கொடுக்கும். நெற்றியில் குங்குமம் இடுவதால் அப்பெண்ணை துர் சக்திகள் நெருங்குவது இல்லை. கழுத்தில் அணியும் திருமாங்கல்யம் அந்த பெண்ணிற்கு வேலியாக அமைகிறது. அதே போல காலில் அணியும் மெட்டி கருப்பை பிரச்சினைகளை சரி செய்வதுடன், உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும் செயலையும் புரிகிறது. அதனால் தான் பெண்கள் அணியும் மெட்டி வெள்ளியால் ஆனதாக இருக்கிறது.

மெட்டி - Twitter Search / Twitter

வெள்ளிச் சுக்கிர பகவானுக்கு உரிய ஒரு உலோகமாகும். ஒரு பெண்ணிடம் சுக போக வாழ்க்கைக்கு தேவையான செல்வங்கள் சேர இரு கால் விரல்களிலும் கட்டை விரலுக்கு அடுத்து இருக்கும் நான்காம் விரலில் மெட்டி அணிய வேண்டும். அவர் அவரின் குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப அதன் எண்ணிக்கையும், உருவமும் மாறுபடுகிறது. ஆனால் பொதுவாக இரண்டு வளையங்களை போடுவது வழக்கம். அப்படி போடும் மெட்டியானது கால் நகத்திற்கு கீழே இருக்கும் மூட்டுக்கு மேலே தங்கியிருக்க வேண்டும். மெட்டி அதற்கு கீழ் செல்லக்கூடாது. பெண்கள் நடக்கும் பொழுது தரையில் மெட்டி உரச வேண்டும். இது தான் சரியான மெட்டி அணியும் முறையாகும்.

இப்படி அணியும் மெட்டி தேய்ந்து விடுவதற்கு முன்னர் நாம் மாற்றி விட வேண்டும். மெட்டி தேய தேய பெண்கள் கையில் இருக்கும் செல்வமும் தேயும் என்கிற நியதி உண்டு. எனவே பெண்கள் மெட்டி அடிக்கடி மாற்றுவதில் தவறு இல்லை! மெட்டி தேய்ந்து போக போக இல்லத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் குறையும். எனவே மெட்டியை கெட்டியாக அணிந்து கொள்ளுங்கள். சுக்ரனுக்கு உகந்த வெள்ளி என்கிற உலோகத்தால் மெட்டியும், காலில் கொலுசு அணியும் பெண்களிடம் சரளமாக பணம் புழங்கும் என்கிற ஐதீகம் உண்டு.

தமிழ் பெண்கள் கொலுசு அணிவதில் இப்படி ஒரு அறிவியல் இருக்கா? வியக்க வைக்கும்  உண்மை! பெண்கள் மட்டும் பார்க்கவும் - ThinaTamil.com - Tamil News, Tamil  News, Tamil ...

காலில் கொலுசு அணியாமல் இருந்தால் குடும்பத்தில் பணவரவு குறையும். அதே போல தங்கம் போன்ற மற்ற உலோகங்களில் பெண்கள் காலில் மெட்டி அல்லது கொலுசு போட கூடாது. கால் கொலுசு எழுப்பும் ஒலியானது குடும்பத்தில் மங்கல ஒலியாகக் கருதப்படுகிறது. இதனால் குடும்பத்தில் சுபிட்சம் நிலைத்திருக்க ஒவ்வொரு பெண்ணும் காலில் கொலுசு அணிய வேண்டும். முந்தைய காலங்களில் பெண்கள் நிறைய முத்துக்கள் வைத்த கொலுசை விரும்பி அணிவது வழக்கம்.

ஆனால் இப்போது பல பெண்களுக்கு இவ்வாறு அணிவது பிடிக்காமல் போய்விட்டது. அதிக சத்தம் எழுப்பும் கொலுசு அணியும் பெண்களுக்கு மன உளைச்சல் என்பது குறைகிறது. கொலுசு சத்தம் பெண்களை மட்டுமல்லாமல், ஒவ்வொலியை கேட்கும் ஆண்களையும் மன உளைச்சலில் இருந்து மீட்டுக் கொண்டு வருகிறது. எனவே மனைவிமார்கள் அதிக சத்தம் உள்ள கொழுசை வாங்கி அணியும் பொழுது கணவன் நிம்மதியாக உணர்கிறான். மேலும் குடும்பத்தில் சுக்ர அருள் அதிகரித்து செல்வமும், வசதியும் பெருகுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts