Home சினிமா இரத்த தானம் செய்த நடிகை-ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இரத்த தானம் செய்த நடிகை-ஆச்சரியத்தில் ரசிகர்கள்

0
இரத்த தானம் செய்த நடிகை-ஆச்சரியத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவிற்கு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்குறார். தமிழ் சினிமாவில் இவர் சமீபத்தில் இவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

ஆண்ட்ரியா

தற்போது இவர் சமூக வலைத்தளம் மூலமாக தனது ரசிகர்களுக்கு உடல்நலன் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ரத்த தானம் அளிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு சில வேண்டுகோளையும் விடுத்துள்ளார். அதில் “இன்று ஒரு நல்ல செயலைச் செய்ய வேண்டுமா? அப்போ இரத்த தானம் செய்யுங்கள்! இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்ததால், நேற்று இரத்த வங்கிக்குச் சென்று ரத்த தானம் செய்தேன் என்று நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here