அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கிய இப்படத்தை போனி கபூர் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி உலகமுழுவதும் வெளியானது. இப்படத்தின் நீளம் மூன்று மணி நேரம் இருப்பதால், படம் பார்த்த ரசிகர்கள் நீளத்தை குறைக்கலாம் என்று கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில், வலிமை படக்குழுவினர் ரசிகர்களின் கருத்துகளை வரவேற்று, இப்படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய வர்ஷன் கொண்ட வலிமை படம் இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது.
வலிமை படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.













































