பிந்திய செய்திகள்

இணையத்தை அதிரவைக்கும் விக்ரமின் மகான் பாடல்..!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் ‘மகான்’. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. மகான் திரைப்படம் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மாஸ் ஹீரோவாகும் துருவ் விக்ரம். - Vanakkam London

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாடலான எவன்டா எனக்கு கஸ்ட்டடி என்ற பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அந்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ள இப்பாடல் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts