பிந்திய செய்திகள்

தினமும் இந்த திசையில் தலை வைத்து தூங்கினால் போதும். உங்கள் வாழ்கை சூப்பராக இருக்கும்.

பல விதமான பண பிரச்சினைகளில் சிக்கி கொண்டிருப்பவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். பின் சொல்லக்கூடிய சின்னச்சின்ன பரிகார முறைகளை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வழியில் தீர்வு கிடைக்கும். அதிர்ஷ்டம் எந்த திசையில் இருந்து எப்படி வீசும் என்று யாராலும் சொல்லமுடியாது. உங்களுக்கு இந்த மூன்று பரிகாரத்தில், ஏதாவது ஒரு பரிகாரத்தின் மூலமாக கூட அதிர்ஷ்டம் அடிப்பதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் கொடுத்து, கூடவே பணவரவை கொடுக்கும் திசை எது, பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வெளியே செல்லும்போது எந்த வண்ணத்தில் உடை அணிவது, எந்த வேருக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது, என்பதை பற்றிய கேள்விகளுக்கு இந்த பதிவின் மூலம் நாம் விடை தெரிந்து கொள்ளப் போகின்றோம். பணம் தரக்கூடிய மூன்று முத்தான விஷயங்கள் உங்களுக்காக. இதற்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. போன போக்கில் சும்மா ட்ரை பண்ணி பார்த்தா போதும். உங்களுக்கு சக்சஸ் ஆன மட்டும் இத அப்படியே ஃபாலோ பண்ணிக்கோங்க.

இதுநாள் வரை நீங்கள் எந்த திசையில் தலை வைத்து தூங்க இருந்தாலும் சரி, இனி மேற்கு திசையை பார்த்து தலையை வைத்து படுத்துக் கொள்ளுங்கள். இரவு மேற்கு திசை பக்கம் தலையை வைத்து தூங்குவதன் மூலம் நமக்கு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும். அதேசமயம் காலையில் கண் விழிக்கும் போது, எழுந்து சூரியன் உதிக்க கூடிய திசையான கிழக்கு திசையை பார்க்கும் போது அன்றைய நாள் முழுவதும் நமக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் நமக்கு வெற்றியை கொடுக்கும். இதனால் பணம் வருவதில் இருக்கக்கூடிய தடைகளும் விலகும். முயற்சி செய்து பாருங்கள்.

ஏதோ ஒரு பண கஷ்டம் உங்களை நீண்ட நாட்களாக துன்புறுத்தி வருகிறது. நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கி இருக்கலாம். நீங்கள் யாரிடமாவது கடனை கொடுத்து இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு பண பிரச்சனையில் சிக்கி கொண்டு இருக்கலாம். இப்படி உங்களுக்கு இருக்கக்கூடிய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினையை தீர்க்க வெளியே செல்லும்போது சிமெண்ட் கலரில் உள்ள ஆடையை அணிந்து கொண்டு செல்ல வேண்டும். ஆண்களாக இருந்தால் சிமெண்ட் நிற சட்டை, பெண்களாக இருந்தால் சிமெண்ட் நிற சுடிதார் அல்லது புடவை உடுத்திக் கொண்டு செல்லும்போது நீண்டநாள் தொந்தரவாக இருந்த அந்தப் பிரச்சினைக்கு சீக்கிரத்தில் தீர்வு கிடைக்கும்.

குப்பைமேனி வேர், தொட்டாசினிங்கி வேர், நாயுருவி வேர், இந்த மூன்று வேரையும் தனித்தனியாக நாம் பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளும்போது நமக்கு நிறைய பணம் சேரும். இந்த மூன்று வேரையும் ஒன்றாக வைத்து ஒரு தாயத்தில் போட்டு உங்கள் கையிலோ, இடுப்பிலோ, கழுத்திலோ கட்டிக்கொள்ளுங்கள். எப்போதும் உங்களுடைய கைக்கு பணம் வருவதும் போவதுமாக இருக்கும். பரிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் ஏதாவது ஒரு பரிகாரத்தையாவது முழுமனதோடு நம்பி முயற்சி செய்தால் அதன் மூலம் ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு லாபம் கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது. ட்ரை பண்ணி பாருங்க.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts