பிந்திய செய்திகள்

உங்கள் வீட்டில் சிறு தொட்டியிலாவது இந்த ஒரு செடியை மட்டும் தவறாமல் வளர்த்து வாருங்கள்-உங்கள் வாழ்க்கையே மாறிவிடும்

இன்றைய காலகட்டம் காலை விடிந்தது முதல் இரவு உறங்க செல்லும் நேரம் வருவது வரை எப்படித்தான் செல்கிறது என்று பலருக்கும் தெரிவதில்லை. காலை எழுந்து தங்களின் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு செல்பவர்கள் இரவு வீடு வந்ததும் இரவு உணவை முடித்து விட்டு உறங்கச் செல்கின்றனர். வீட்டில் இருப்பவர்களிடம் கூட பேசுவதற்கு நேரம் இல்லாமல் இருக்கிறது. இப்படி கணவன் மனைவி இருவருமே பேச நேரமில்லாமல் இருந்தால் உறவுகளுக்கிடையே எப்படி பேச்சுவார்த்தை இருக்கும். அவ்வாறு இன்றைய மனிதன் மிஷின் போல ஓட்டம் பிடித்துக் கொண்டிருக்கிறான். இதற்கு காரணம் பணம் என்ற ஒன்று. இந்த பணத்தை சம்பாதித்தால் மட்டுமே சமுதாயத்தில் நல்ல வாழ்க்கை வாழ முடியும். இப்படி அனைவருக்கும் தேவைப்படுகிற இந்த பணத்தை எப்படி பல மடங்காக நம்மிடம் ஈர்க்க முடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பணம் இல்லாத ஒருவரை இந்த சமுதாயம் மதிப்பதில்லை. ஒருவன் நல்ல மனிதனாக இருந்த பொழுதும் அவனிடம் பணம் இல்லை என்றால் அவரின் நல்ல குணம் மற்றவரின் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் ஒருவரிடம் பணம் இருந்து அவர்களின் குணம் கெட்டதாக இருந்தாலும் அவர்களை புகழ்ந்து சொல்வதற்கு என்று அவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.

அப்படி பணம் மற்றவர்களின் கண்களை மறைத்துக் கொண்டிருக்கிறது. எனவே ஒவ்வொரு மனிதனும் தங்களின் வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற்காக பணம் சம்பாதிப்பதற்கு நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் உறவுகள் இடையே இருக்கும் பாசத்தையும் அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அந்த அளவிற்கு ஒவ்வொருவருக்கும் பணத் தேவை அதிகமாக இருக்கிறது.

இப்படி பணத்தின் தேவை அதிகமாக இருப்பதால் இந்த பணத்தை நம்மிடம் அதிகப்படியாக ஈர்க்கின்ற சில ஆன்மிக விஷயங்களை தொடர்ந்து செய்துவர பணக்கஷ்டம் குறைந்து, நல்ல வருமானம் கிடைக்கிறது. பணம் பல வழிகளில் நம்மைத் தேடி வருகிறது. இதற்காக சுக்கிரனிடம் வரம் பெற்ற மருதாணி செடியை தான் நமது வீட்டில் வளர்க்க வேண்டும்.

இதற்காக ஒரு மருதாணி செடியை வாங்கி வந்து, அதனை ஒரு சிறு தொட்டியில் வைப்பதற்கு உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் வளாகத்தில் இருந்து சிறிதளவு மண் எடுத்து வர வேண்டும். அல்லது ஆற்றங்கரை, கடற்கரை போன்ற இடங்களில் இருந்தும் மண் எடுத்துக்கொள்ளலாம். பின்னர் இந்த மண்ணையும் செடியுடன் இருக்கும் மண்ணையும் சேர்த்து தொட்டியில் வைப்பதற்கு முன்னர்,

அந்தத் தொட்டியில் ஒன்பது சில்லறை நாணயங்களை போட வேண்டும். பிறகு அதன் மீது இந்த மண் கலவையை கலந்து, செடியை அதில் பக்குவமாக வைக்கவேண்டும். பிறகு தினமும் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி காலை அல்லது மாலை வேளையில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். பிறகு காலை வெளியில் செல்வதற்கு முன்னர் இதிலிருந்து ஒரு இலையைப் பறித்து உங்கள் பணப்பர்ஸில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மாலை திரும்பி வந்ததும் இந்த இலையை கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு இலையை உங்கள் பர்சில் வைத்து வர, உங்களிடம் வரும் பணம் பல மடங்காக அதிகரிப்பதை சில நாட்களில் உங்களால் உணர முடியும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts