பிந்திய செய்திகள்

நீங்கள் சைவ உணவு மட்டும் உண்டால் என்னவாகும் ? கண்டிப்பாக இது உங்களுக்கு

மருத்துவ செய்திகள்:நீங்கள் சைவ உணவை மட்டும் உண்பவர்களாக இருந்தால் நீங்கள் உண்ணும் உணவில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக போதியளவு புரோட்டின் உணவுகளை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆனால் பலரும் அதில் தவறான தேர்வுகளை செய்கின்றனர்.

நீங்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்தால் உங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் சில:

 1. பயறு.
  பயறில் 3 அவித்த முட்டையை விட அதிகளவான புரோட்டின் காணபப்டுகின்றது. அத்துடன் வாரத்தில் 4 தடவைகள் இதனை சாப்பிடுவதனால் உடல் எடையைக் குறைக்க முடியும்.
  100கிராம் பயறில் 9கிராம் புரோட்டின் உள்ளது.
 2. பட்டாணி.
  இதில் கீரையை விட எட்டு மடங்கு புரோட்டின் காணப்படுவதுடன், விட்டமின் –சியும் காணப்படுவதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும், ஆரோக்கியமும் அதிகரிக்கச் செய்யும்.
  100கிராம் பட்டாணியில் 6.3கிராம் புரோட்டின் உள்ளது.
 3. ஆட்டா
  இதில் குளுட்டன் இருப்பதில்லை. அதிகளவான புரோட்டினும் மக்னீசியமும் இதில் காணப்படுகின்றது.

100கிராம் ஆட்டாவில் 9.6கிராம் புரோட்டின் உள்ளது.

 1. கொத்துக் கடலை.
  கொத்துக்கடலை சாப்பிடுவதனால் உடல் எடையைப் பேணுவதுடன், இதில் காணப்படும் புரோட்டினால் தசைகள் உருவாவதுடன், மெட்டபோலிசத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
  100கிராம் கொத்துக்கடலையில் 19 கிராம் புரோட்டின் உள்ளது.
 2. பசலைக் கீரை.
  ஒரு கப் பசலைக் கீரையில் ஒரு அவித்த முட்டையை விட அதிகமான புரோட்டின் காணப்படுகின்றது. இதனை அவித்து சாப்பிடுவது தான் சிறந்தது. பச்சையாக சாப்பிட்டால் வயிறு ஊதச் செய்வதுடன், குடலில் கல்சியம் உறிஞ்சப்படுவதை தவிர்க்கின்றது.
  100கிராம் பசலைக் கீரையில் 5.6கிராம் புரோட்டின் உள்ளது.
 3. சோயா பீன்ஸ்.
  சோயா புரோட்டின் நிறைந்த ஆரோக்கியமான உணவு. இது இறைச்சியை போன்று காணப்படுவதனால் பலரும் விரும்பி உண்பர்.
  100கிராம் சோயாவில் 36கிராம் புரோட்டின் உள்ளது.
 4. கொய்யா.
  கோவாவில் விட்டமிந்சி மட்டுமல்லாது புரோட்டினும் நார்ச்சத்துக்களும் அதிகளவில் உள்ளது. இதனால் சைவ உணவு உண்பவர்களிற்கு மிகவும் சிறந்தது.
  100கிராம் கொய்யாவில் 2.6 கிராம் புரோட்டின் உள்ளது.
 5. அமரந்
  அமரந் எனப்படும் ராஜ்கிரா தாணிய வகை, தொண்மை தொட்டு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது. இது முழுமையாக குளுட்டனால் உருவானதால் புரோட்டின் அதிகமாக உள்ளது. அத்துடன் அமினோஅமிலங்கள், கல்சியம், இரும்பு போன்ற கனியுப்புக்களும் உள்ளது.
  100கிராம் அமரந்தில் 4 கிராம் புரோட்டின் உள்ளது.
 6. சீயா விதை.
  சீயா விதை சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கான மிகவும் சிறந்த தாணியம். இதில் புரோட்டினுடன் உடலிற்குத் தேவையான 9 அமினோ அமிலங்கள் காணப்படும். அத்துடன் இதில் காணப்படும் நார்ப் பொருள் மற்றும் கொழுப்புச் சத்தினால் நீண்ட நேரத்திற்கு பசியை ஏற்படுத்தாது. தினமும் நீங்கள் சாப்பிடும் மென்பானங்களில் அல்லது சீரியலில் 1 தேக்கரண்டி சீயா விதைகளைச் சேர்ப்பது முக்கியமானது.

சீயா விதைகள் நீரினை உறிஞ்சி எடுப்பதனால் அதிகளவு நீர் உட்கொள்வது அவசியமானது. இல்லையெனில் உடல் வறட்சி ஏற்படும்.
100கிராம் சீயா விதையில் 4 கிராம் புரோட்டின் உள்ளது.

 1. திணை.
  திணை மிகவும் சிறந்த தாணிய உணவு. இதனை உட்கொள்வதனால் உடலிற்குத் தேவையான சக்தியும், வலிமையும் கிடைக்கும். இதில் அதிகளவான புரோட்டின், இதயத்திற்குத் தேவையான கொழுப்பு, மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இதில் காணப்படும் எல்-ஆர்ஜினைன் எனும் அமினோ அமிலம் தசைகளின் உருவாக்கத்திற்கு உதவுவதுடன் மெட்டமோலிசத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது.
100 கிராம் திணையில் 13 கிராம் புரோட்டின் உள்ளது.

 1. வேர்க்கடலை வெண்ணெய்.
  வேர்க்கடலை வெண்ணெய்யை அதிகளவில் சாப்பிட்டால் வயிற்றுப் பகுதியின் அளவு அதிகரித்து விடும். இதனால் தினமும் 2 மேசைக்கரண்டி மட்டும் போதுமானது.
  2 மேசைக்கரண்டி வேர்க்கடலை வெண்ணெய்யில் 7கிராம் புரோட்டின் உள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts