பிந்திய செய்திகள்

ருசியான மாதுளம் பழத்தின் பழத்தின் பயன்கள்!

உடல்பலம்

மாதுளம் பழம் பிராணவாயுவை கிரகிப்பை ரத்தத்தில் அதிகபடுத்துவதால் உடல் பலம் இல்லாதவர்கள், நோயாளிகள் மற்றும் சுறுசுறுப்புத்தன்மை இல்லாதவர்கள் இப்பழத்தை அதிகம் உண்டு வருவது சிறந்த பலன் அளிக்கும்.

புற்று நோய்

மாதுளம் பழத்தை ஜூஸ் பிழிந்து அதனுடன் கற்கண்டுகளை சேர்த்து தினந்தோறும் காலையில் அருந்தும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். வேறு சில வகையான புற்று நோய்களை தடுக்க கூடிய சக்தியும் மாதுளம் பழத்திற்கு உண்டு.

ஞாபக சக்தி

தினந்தோறும் எட்டு அவுன்ஸ் அளவு மாதுளம் பழ ஜூஸ் அருந்துபவர்களுக்கு மூளை செல்களின் வளர்ச்சி மேம்படுகிறது. மேலும் வயதாவதால் மனிதர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி, மந்தத்தன்மை போன்றவையும் நீங்குவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

தாம்பத்திய ஈடுபாடு

உடலில் ஏற்படும் குறைபாடுகளாலும் மன அழுத்தங்களால் சிலருக்கு தாம்பத்திய சுகத்தில் ஈடுபாடில்லாமல் போகிறது. இப்படி பட்ட நபர்கள் மாதுளம் பழம் அல்லது சர்க்கரை அதிகம் கலக்காத மாதுளம் ஜூஸை தினமும் அருந்தி வந்தால் உடலில் நரம்புகள் பலம் பெற்று தாம்பத்திய சுகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ரத்தம்

உடலில் ரத்தம் என்பது அனைத்து உடலுறுப்புகளும் தொடர்ந்து ஈடுபடுவதற்கு அவசியமானதாகும். உண்ணும் உணவு, அருந்தும் நீர், சுவாசிக்கும் காற்று ஆகியவற்றாலும் ரத்தத்தில் நச்சுகள் சேருகின்றது.

மாதுளம் பழம் அல்லது மாதுளம் ஜூஸ் அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் நச்சுகள் நீங்கும். ரத்தத்தில் சிகப்பணுக்களின் உற்பத்தியையும் மேம்படுத்தும்.

இதய நலம்

மாதுளம் பழத்தில் கொழுப்பை கரைக்கும் சக்தி அதிகம் உண்டு.
இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் தினந்தோறும் காலையில் மாதுளம் பழத்தை சாப்பிடுவது நல்லது.

மாதுளம் பழம் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் கொழுப்பு படிவதை தடுத்து இதய பாதிப்புகள் வராமல் தடுக்கிறது. எலும்புகள் மனிதர்களின் உடலுக்கு உறுதியை தருவது எலும்புகள்.

வயது மூப்பு காரணமாக எல்லோருக்கும் எலும்புகள் தேய்மானம் ஆவது மற்றும் எலும்புகள் உறுதித்தன்மை இழப்பது ஏற்படுவது இயற்கையானது தான்.

இளம் வயதிலிருந்து மாதுளம் பழம் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எழும்பவுகள் தேய்மானம் அடைவது, உறுதித்தன்மை இழப்பது போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

வைட்டமின் சத்துகள்

வைட்டமின் சத்துகள் உடலுக்கு அவசியமான ஒரு சத்து ஆகும். மாதுளம் பழத்தில் வைட்டமின் ஈ, வைட்ட மின் சி, வைட்டமின் கே போன்றவை சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தினமும் மாதுளம் பழம் சாப்பிட வேண்டும்.

மாதுளம் ஜூஸ் போட்டு சாப்பிட நினைப்பவர்கள் சர்க்கரையை சேர்க்காமல் பருகுவது நல்லது.

நோயெதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ஒரு பழமாகும். உடலில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதுளம் பழத்தை அதிகம் உண்ண அவர்களின் உடலிலிருந்த நோய்க்கிருமிகள் அழிந்ததாக மேற்கத்திய மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வயிற்று கோளாறுகள்

எந்த ஒரு மனிதனும் ஆரோக்கியமாக இருக்க அவனது வயிறு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் ஏற்படும் அல்சர், வாயு கோளாறுகள், குடற்புழுக்கள் போன்ற அனைத்திற்கும் மாதுளம் பழம் சிறந்த நிவாரணமாக இருக்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts