பிந்திய செய்திகள்

முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் 6 உணவுகள்

பொதுவாக எல்லோருக்கும் ஏற்படும் முதுகு வலி பிரச்சினை அது முதுகெலும்பு ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகி இருப்பதற்கான அறி குறியாக அமையலாம். நமது நாட்டில் சுமார் 25 முதல் 30 சதவீதம் பேர் முதுகெலும்பு பிரச்சினையால் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

உடல் செயலற்ற தன்மை, உடல் பலவீனம், தவறாக அமரும் தோரணை, அதிக எடை இழப்பு காரணமாக முதுகெலும்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்துள்ள உணவுகளை சரியான அளவில் உண்பதன் மூலம் இத் தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

  1. தாவர புரதம்: விலங்குகளில் இருந்து பெறப்படும் புரதத்தை விட தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதம்தான் முதுகு தண்டுவடத்திற்கு நலம் சேர்க்கும். விலங்கு புரதம் முதுகெலும்பில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். முதுகெலும்பு பலவீனத்திற்கும் வழிவகுக்கும். சியா விதைகள், பருப்பு வகைகள், பீன்ஸ், பாதாம் போன்றவை முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்களை கொண்டுள்ளன.
  2. கடல் உணவுகள்: கடல் உணவுகளில் குறிப்பாக சால்மன் மீன்களில் உள்ள மெலிந்த புரதம் தண்டுவட ஆரோக்கியத்தை வலுப்படுத்தக்கூடியது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவும். மேலும் திசுக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சில குறிப்பிட்ட வகை மீன்களும், கடல் உணவுகளும் முதுகெலும்பு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகின்றன. இருப்பினும் முதுகுவலி பிரச்சினை கொண்டவர்கள் சால்மன் வகை மீன்களை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
  3. பால் பொருட்கள்: முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த பால் பொருட்களை உட்கொள்வது அவசியமானது. ஏனெனில் பெரும்பாலான பால் பொருட்களில் அதிக அளவு பால் உள்ளது. எலும்புகள் கால்சியத்தால் ஆனது. பாலிலும் கால்சியம் இருப்பதால் அதனை உட்கொள்வது முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பால் மட்டுமே உட்கொள்ளாமல் தயிர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பிற பால் பொருட்களை உட்கொள்வதன் மூலம் எலும்புகளை பாதுகாக்கலாம். எனினும் பால் பொருட்களை அதிகம் உட்கொள்ளக் கூடாது. அவற்றில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களின் விகிதத்தை சமநிலையற்றதாக மாற்றக்கூடிய பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. குறிப்பாக தயிர், பாலாடைகட்டி போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டாம்.

  1. பழங்கள்: இவைகளில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முதுகெலும்பு பகுதியை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவும். இருப்பினும் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச்செய்யும் தன்மை கொண்டதால் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளக்கூடாது. பெர்ரி வகை பழங்களை உட்கொள்வது முதுகெலும்புக்கு நலம் சேர்க்கும்.
  2. காய்கறிகள்: பொதுவாக காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவும் காய்கறிகள் ஏராளம் உள்ளன.

காய்கறிகள் மற்றும் அதில் இருந்து பெறப்படும் ஊட்டச்சத்துக்களின் எண்ணிக்கை குறைவதால் முதுகெலும்பு பிரச்சினைகள் ஏற்படலாம். குறிப்பாக பச்சை காய்கறிகள் முதுகெலும்புகளில் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கவும், எலும்பு அமைப்பை வலுவாக்கவும் துணைபுரியும்.

முட்டைக்கோஸ், புரோக்கோலி மற்றும் கீரை ஆகியவை முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டவை. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

  1. மூலிகைகள் மற்றும் மசாலாக்கள்: முதுகெலும்புக்கு வலு சேர்க்கும் பயனுள்ள மூலிகைகள் பல உள்ளன. சுவைக்காகவும், உடல் நலனுக்காகவும் இந்திய உணவுகளில் மசாலாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மஞ்சள் போன்ற சில மசாலாப் பொருட்கள், சேதமடைந்த திசுக்களை சரிசெய்ய உதவுகின்றன.

இஞ்சி, துளசி, ரோஸ்மேரி, லவங்கப்பட்டை போன்ற மூலிகை மற்றும் மசாலாப் பொருட்கள் முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. சில மருந்துகளில் கூட இவை பயன்படுத்தப்படுகின்றன. மசாலாப் பொருட்கள், மூலிகைகளை பயன்படுத்தி டீ தயாரித்தும் பருகலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts