பிந்திய செய்திகள்

தினமும் உணவில் முட்டை சேர்ப்பது நல்லதா?

ஒரு முட்டையில், அதிகத் தரமான புரதச்சத்து சுமார் 6 கிராம் இருக்கிறது. சத்து நிறைந்த முட்டையை தினமும் சாப்பிடுவது நல்லதா என்பது பற்றி பார்க்கலாம்.பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் கிளம்பும் அவசரத்தில் காலை உணவு தயாரிப்பதே பெரும்பாடு. அப்படியே தயாரித் தாலும்,

அதைச் சரியாகச் சாப்பிடாமல் ஓடுவதே பலரின் இயல்பு. தவிர்க்கக் கூடாதது காலை உணவு என்பதை மருத்துவர்கள் வலியுறுத்து கிறார்கள்.அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரமும் சேர்ந்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு முட்டையைச் சேர்த்துக் கொண்டால் போதும். நம் உடலுக் கான முழு ஆற்றலுக்கும் உத்தர வாதம்.

முட்டை உணவுகள் எளிதில் செய்து விடக் கூடியவை. சரி… காலை உணவில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவு களில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும் கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கி யுள்ளன. அவை…

புரதச் சத்து:

ஒரு முட்டை யில், நம் உடலால் எளிதில் எடுத்துக் கொள்ளக் கூடிய அதிகத் தரமான புரதச் சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.

வைட்டமின் டி:

இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்பு களுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்:

இதிலிருக்கும் லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.

முட்டை, உடல் எடையைக் குறைப் பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராள மாகச் சேர்த்துக் கொள்ளலாம்..`முட்டை நல்ல உணவல்ல’ என்று தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அறிவித்தது.

இதன் மஞ்சள் கருவி லிருக்கும் அதிக பட்சக் கொழுப்பால் இதய நோய்கள் வரக்கூடும்’ என்று காரணமும் சொல்லப் பட்டது. ஆனால், பிறகு வந்த ஆராய்ச் சிகளோஅப்படி எந்த ஆபத்தும் இதனால் ஏற்படாது’ என்றன.

வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுப வர்களின் ரத்த அளவு ஒரே நிலையில் தான் இருக்கும் என்பதும் கண்டறியப் பட்டது.

தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், நமக்கு தினமும் 300 மில்லி கிராம் வரை கொழுப்புச் சத்து தேவை என்கிறது.

அந்தளவில் 62 சதவிகிதம் வரை ஒரு முட்டை ஈடுகட்டுகிறது. நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்சனை ஏற்படும்.

ஆனால், முட்டை யிலோ நல்ல கொழுப்புகள் தான் நிறைந் துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறு களும் முட்டையால் ஏற்படாது.

இதன் அளவு ஒவ்வொருவர் உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும். உடல் உழைப்புள்ள நபர்களு க்கு வேறு விதமான உணவு முறை தேவைப் படும்.
தினமும் முட்டை சாப்பிடுவது
உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமை யான உடற் பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளை க்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவு களைச் சாப்பிடலாம்.

இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாத வர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும்.

மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக் கேற்ப தான் சாப்பிட வேண்டும்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடு வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர் களுக்கு இதனால் இதய நோய் ஏற்படு வதற்கான வாய்ப் புள்ளது.
தினமும் முட்டை நல்லதா?
முட்டை யுடன் கோதுமை பிரெட் மற்றும் காய்கறிகள் தான் சத்தான கூட்டணி. இறைச்சி, சீஸ், வெள்ளை பிரெட் ஆகிய வற்றை இதனுடன் சாப்பிடும் போது சுவை யாக த்தான் இருக்கும்.

ஆனால், முட்டையுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது.

மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லெட், அவித்த முட்டை யாகவும் சாப்பி டலாம். ஆரோக்கிய மான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம்.

எனவே, முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி என்று வாழ்ந்தால், மகிழ்ச்சியான வாழ்வை நிச்சயம் பெறலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts