பிந்திய செய்திகள்

கஷ்டப்படாமல் வெள்ளையாக இப்படி ஒரு யோசணையா ?

கஷ்டப்படாமல் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் நம்முடைய உடல் அழகையும், முடி அழகையும் பாதுகாக்க ஒரு சுலபமான ஐடியா உங்களுக்காக. இந்த டிப்ஸ் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும், சிலருக்கு தெரியாமலும் இருக்கும். தெரியாதவர்கள் இந்த குறிப்பை இப்போது தெரிந்து கொண்டு பயன்படுத்தி பலன் பெறலாம்.

வெயில் காலத்தில் சன் டேனிலிருந்து நம்முடைய சரும அழகை பாதுகாக்க, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க, தோல் சுருக்கத்தை நீக்க, சீக்கிரத்தில் வெள்ளையாக இந்த குறிப்பு நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த குறிப்பை ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லோரும் பயன்படுத்தலாம்.

நம்முடைய எல்லோர் வீட்டிலும் தினமும் சாதம் செய்வோம். சாதம் வடிக்க அரிசியை தண்ணீர் ஊற்றி ஊற வைப்போம் அல்லவா. அரிசி ஊற வைத்த அந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு இரண்டு அல்லது மூன்று முறை அந்த அரிசியை கழுவோம் அல்லவா அந்த தண்ணீரையும் வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த அரிசி களைந்த தண்ணீரில் சத்துக்கள் ஏராளம். இதை கீழே தானே நாம் ஊற்றுவோம். இந்த அரிசி களைந்த தண்ணீரை கீழே ஊற்றாமல் அப்படியே தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் சுடுதண்ணீரில் குடித்தாலும் சரி அல்லது பச்சை தண்ணீரில் குளித்தாலும் சரி, உப்பு தண்ணீரில் குளித்தாலும் சரி, அந்த தண்ணீரில் இந்த அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து எப்போதும் போல உடம்பு குளிக்கலாம்.

தலை குளிக்கலாம். அது நம்முடைய விருப்பம் தான். தொடர்ந்து இதே போல் தினமும் குளித்து வர உங்களுடைய சரும நிறத்தில் படிப்படியாக நல்ல வித்தியாசம் தெரிய தொடங்கும்.

தலைமுடி உதிர்வு அதிகமாக இருப்பவர்கள் இப்படி இந்த அரிசி களைந்த தண்ணீரில் தொடர்ந்து தலையை அலசி வர வேண்டும். அதாவது ஷாம்பு போட்டு சுத்தமாக தலைக்கு குளித்து முடித்துவிட்டு நல்ல தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்‌.

இறுதியாக 2 கப் இந்த அரிசி களைந்த தண்ணீரை தலையில் ஊற்றி அப்படியே விட்டு விடுங்கள். அவ்வளவு தான். அதன் பின்பு தலையை நன்றாகத் துவட்டி கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுடைய முடிக்கு ஊட்டச்சத்து கிடைத்து அடர்த்தியாகவும் முடி உதிர்வு இல்லாமலும் வளர தொடங்கும்.

இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி நம்முடைய அழகை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்.

கடையிலிருந்து வாங்கிய க்ரீம் ஷாம்பூ போல இயற்கையான பொருட்கள் உடனடியான ரிசல்டை கொடுக்காது. ஆனால் தொடர்ந்து பயன்படுத்தி வர நல்ல ரிசல்ட் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

உங்களுடைய வீட்டில் சாதத்தை குக்கரில் வைக்காமல் அரிசியை குண்டானில் வேகவைத்து வடிப்பீர்கள் என்றால் அந்த கஞ்சி தண்ணீரைக் கூட நாம் குளிக்கின்ற தண்ணீரில் ஊற்றி கலந்து குளிக்கலாம்.

சாதம் வடித்த கஞ்சியும் நல்ல ரிசல்ட் கொடுக்கும் என்பது குறிப்பிடதக்கது. உங்களுக்கு இந்த குறிப்புகள் பிடித்திருந்தால் உங்க வீட்டில மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts