பிந்திய செய்திகள்

அசாதாரண இயற்கை நிகழ்வு அமெரிக்காவில் பதிவானது!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி அமெரிக்காவின் தென்பகுதியில், வானில் ஏற்பட்ட மின்னல் புதிய உலக சாதனை செய்துள்ளதாக ஐ..நா சபை தெரிவித்துள்ளது.

இந்த மிகப்பெரிய மின்னல் அமெரிக்காவின் மிஸிஸிபி, லூசியானா, டெக்சர்ஸ் மாகாணம் என மொத்தமாக 770 கி.மீ தூரம் தெரிந்துள்ளது என உலக வானிலை அமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதியில் தெற்கு பிரேசில் நாட்டில் பதிவான மின்னலை விட, கூடுதலாக 60 கி.மீ பயணம் செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் இயற்கையின் அசாதாரண பதிவுகளில் ஒன்று எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts