Home உலகம் அமெரிக்கா விரைவில் தாக்குதல் இடம்பெறும் அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு!

விரைவில் தாக்குதல் இடம்பெறும் அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு!

0
விரைவில் தாக்குதல் இடம்பெறும் அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு!

உக்ரைன் கடந்த 1991 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சிதறியபோது, அதில் அங்கம் வகித்த உக்ரைன் சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக்கொண்டது.

இதனால் தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு, சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷ்யா கருதுகிறது.

இந்நிலையில் நேட்டோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான எண்ணிக்கையில் படையினரை ரஷ்யா குவித்து வந்தது.

இதனால் இருநாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் உக்ரைன் எல்லை அருகே படைகளை திரும்பபெற்றதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த அறிவிப்பு பொய்யானது என அமெரிக்கா குற்றம்சாட்டி வரும்நிலையில் அடுத்த ஓரிரு நாள்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த விவகாரத்தில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் இனி ஈடுபடப்போவதில்லை எனவும் பைடன் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here