Home உலகம் அமெரிக்கா 264 லொட்டரி சீட்டுகளை வாங்கிய இளைஞனுக்கு கிடைத்த அதிர்ச்சி

264 லொட்டரி சீட்டுகளை வாங்கிய இளைஞனுக்கு கிடைத்த அதிர்ச்சி

0
264 லொட்டரி சீட்டுகளை வாங்கிய இளைஞனுக்கு கிடைத்த அதிர்ச்சி

விர்ஜினியாவை சேர்ந்த ஜலீன் டைலர் என்ற அமெரிக்க இளைஞர் ஒருவர் கடந்த இரண்டு மாத இடைவெளியில் லொட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.இவர் மொத்தமாக 264 லொட்டரி சீட்டுகள் வாங்கிய நிலையில் அனைத்திற்கும் பரிசு விழுந்துள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் வாங்கிய ஒரு டிக்கெட்டின் விலை $1 ஆகும். அதன்படி அனைத்து டிக்கெட்களுக்கு சேர்ந்து மொத்தமாக $132,000 (இலங்கை மதிப்பில் 2,67,98,706.00) பரிசு விழுந்துள்ளது.

முதலில் 104 டிக்கெட்களை வாங்கிய அவர் பிறகு 160 டிக்கெட்களை வாங்கியிருக்கிறார். அனைத்து டிக்கெட்களையும் டைலர் பல்பொருள் அங்காடியில் வாங்கியிருக்கிறார்.

இப்படி வாங்கிய அனைத்து டிக்கெட்களுக்கும் பரிசு விழுந்துள்ளதால் டைலர் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here